அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (22-07-2016) கேள்வி பதில்


கேள்வி:−

          மதிப்பிற்குரிய சட்டத்தரணி சுதன் ஐயா!நான் சுன்னாகத்திலிருந்து சுதாகரன்.ஐயா எனது தங்கைக்கு வயது 32.பத்து வருடமாகியும் இன்னும் குழந்தையில்லை.இதனை சாட்டாக வைத்து அவளுடைய மாமியார் அதிக கொடுமை பண்ணுகிறார்.அதை பார்க்க முடியவில்லை.தங்கை விவாகரத்து பெற வேண்டுமா?அல்லது வேறு என்ன பண்ண வேண்டும்?


பதில்:−

            அன்புச் சகோதரரே!உங்கள் தங்கை தற்போதும் கன்னியாகவே உள்ளார் காரணம், அவர் கணவர் ஆண்மையற்றவர். ஆதலால், உங்கள் தங்கை இன்னும் மலராமலேயே இருக்கிறார்.32 வயதாகிற உங்கள் தங்கைக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க விரும்புகிற நீங்கள்,மிகப்பெரிய பொறுப்பை உங்கள் தலையில் சுமக்க வேண்டியிருக்கும் என்பதனை மறந்து விடாதீர்கள்.
சகோதரரே! உங்களுடைய தங்கையிடம் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறு இருக்கிறதா என்பதை மருந்துவர் மூலமாக அறிந்து கொள்ளுங்கள்.காரணம்
உன் தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதாக இருப்பதனால் தங்கையிடம் குறையுள்ளதா?என்பதனை முதலில் அறிவது நல்லது.இல்லையேல் இதே பிரச்சனை மீண்டும் இன்னுமொரு திருமண கணவருக்கும் வர வாய்புள்ளது.அத்துடன் முதலில் உங்கள் தங்கை மீண்டுமொரு திருமணத்திற்கு சம்மதிக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.தன் கணவரை அவள் விவாகரத்து செய்ய வேண்டும்.விவாகரத்துக்கான காரணத்தை - அதாவது, கணவர் ஆண்மையற்றவர் என்பதை, மருத்துவ சான்றிதழ் மூலம் நிரூபிக்க வேண்டும்.
இதன்பின், நீதிமன்றில் வழக்கு முடிந்து,வெளியே வந்து, இன்னொரு ஆண் பிள்ளையைத் தேடி இவளை மணம் முடிப்பது என்பதும், இவளை நல்லபடியாக அவன் வைத்துக் கொள்வானா?என்பதும், விடை காண முடியாத கேள்வி.
இதைவிட உன் தங்கையை நல்ல பெண் வைத்தியரிடம் அழைத்துச் சென்று,அவளது அதிக உதிர போக்குக்கான காரணத்தை கண்டுபிடித்து, சரி செய்யுங்கள்.வலிப்பு நோய் வராமல் இருக்க, முடிந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கவும்
இதற்கு மேலும் ஒரு குழந்தை வேண்டுமென்று உங்கள் தங்கை ஆசைப்பட்டால் - அண்ணன் குழந்தை, தம்பி குழந்தை என்று எடுத்து வளர்த்து,பின் அவர்களிடமே பேச்சு வாங்குவதை விட, ஆதரவற்ற குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்க்கச் சொல்லுங்கள்



உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
<20 .07.2016="" br="">
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் . 

இன்றைய (22-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.