யுத்தக்குற்ற விசாரணைப்பொறிமுறை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு!
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பிலான உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை தாம் வலியுறுத்தப்போவதில்லை என்ற கருத்தை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிர்வாக அதிகாரி போல் கோட்ஃபிரே இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
விசாரணை பொறிமுறை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் முன்வைத்துள்ள யோசனைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், யுத்தக்குற்ற விசாரணைப் பொறிமுறையில், பொதுநலவாய மற்றும் வெளிநாட்டவர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்நிலைப்பாடானது நியாயமான ஒரு தீர்வை எதிர்ப்பார்க்கும் வகையிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நம்பகத்தன்மையை கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் யோசனையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் நடைமுறைகளை தொடர்ந்து அவதானித்து வருவதாக போல் கோட்ஃபிரே தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேவை ஏற்படும் பட்சத்தில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யுத்தக்குற்ற விசாரணைப்பொறிமுறை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு!
Reviewed by Author
on
July 25, 2016
Rating:
Reviewed by Author
on
July 25, 2016
Rating:


No comments:
Post a Comment