மாகாண மட்டத்தில் பொலிஸ் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன?
மாகாண மட்டத்தில் பொலிஸ் ஆணைக்குழுக்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முழு நாட்டையும் ஒரே பொலிஸ் வலையமைப்பாக உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துணைப் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்குக் கீழ் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மாகாண பொலிஸ் ஆணைக்குழு உருவாக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவிற்கு இவ்வாறு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பில் பொலிஸார் பொறுப்பு கூறும் வகையில் சட்டத் திருத்தம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
விசாரணைகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதுதொடர்பில் அரசியல் தலையீடு இன்றி சுயாதீனமாக செயற்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் வழக்குரைஞர் ஒருவரை நியமிக்கவும் பரிந்துரை செய்யப்ட்டுள்ளது.
மாகாண மட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் பதவி உயர்வு உள்ளிட்டனவற்றை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மாகாண மட்டத்தில் பொலிஸ் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன?
Reviewed by Author
on
July 24, 2016
Rating:

No comments:
Post a Comment