வவுனியா நகரசபையில் தீயணைப்பு பிரிவு ஆரம்பம்!
வவுனியா நகரசபையில் தீயணைப்பு பிரிவு நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் த.தாமேந்திரா தெரிவித்தார்.
இதன்படி, புதிய தீயணைப்பு வாகனம் மற்றும் நோயாளர் காவு வண்டி ஆகியன ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் இன்று முதல் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை உடனடி தீயணைப்பு சேவைக்கு 0242225555, 0243245555 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா நகரசபையில் தீயணைப்பு பிரிவு ஆரம்பம்!
Reviewed by Author
on
July 24, 2016
Rating:

No comments:
Post a Comment