மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா....முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா 13-07-2016 மிகவும் சிறப்பாக ஆரம்பமானது.
மாதோட்டம் எனும் மன்னார் மண்ணிலே திருக்கேதீச்சரப்பதிகத்தில் அமைந்துள்ள கள்ளியடி கற்பகப்பிள்ளையார்-இலக்குமிதாயார்-பாலமுருகன்-நவநாயகர்-வைரவர்-சண்டீஸ்வரர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு நிகழும் மங்கலகரமான துர்முகி வருடம் ஆனி-30ம்நாள் (13-07-2016) புதன் கிழமை காலை 9-00 மணி முதல் ஆரம்பமாகி தினமும் விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம் அபிஷேகம் விசேட பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும்.
மாலை விசேட பூஜை கூட்டுப்பிராத்தனை வசந்த மண்டப பூஜை உள்வீதி வெளி விதி உலா திருவருட்பிரசாதம் வழங்கல் என்பன நிகழ்ந்து புர்த்தி தினமான ஆடி 8ம் நாள் (23-07-2016) சனிக்கிழமை சதய நட்சத்திர நன்னாளில் பகல் 108 சங்காபிஷேக பூஜையுடன் அன்னதானமும் நடைபெறும் அத்தோடு இரவு விசேட பூஜை கூட்டுப்பிராத்தினை வசந்த மண்டப பூஜையைத்தொடர்ந்து விநாயகப்பெருமான் உள்வீதி வெளிவீதி உலா வரும் அருங்காட்சி நடைபெற திருவருள் கூடியுள்ளது.
ஆகவே விநாயகப்பக்த அடியார்கள் கலந்து கொண்டு இறையாசி பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்…
மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா....முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 14, 2016
Rating:
No comments:
Post a Comment