திருகோணமலை-மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை-கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவுல்வெவ பகுதியில் இன்று (28) அதிகாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்த நபர் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில், உயிரிழந்தவர் பக்மீகம-கோமரங்கடவெல பகுதியைச்சேர்ந்த தானில் சதறுவன் (18 வயது )எனவும் படுகாயமடைந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த சுதத் லக்மால் (18 வயது) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மதவாச்சியில் இருந்து கல்கடவெல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் மூன்று பேர் இன்று (28) அதிகாலை சென்ற போது தாவுல்வெவ வளைவில் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரும் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே ஒருவர் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
July 28, 2016
Rating:

No comments:
Post a Comment