அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்- 80 பேர் பலி!! அவசரநிலைப் பிரகடனம்! இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை..


பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற விபத்தில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறி ஒன்று மக்கள் கூட்டத்தில் புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டின், நைஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.


மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன், Bastille Day கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது யாரும் எதிர்பாராத விதமாக வேகமாக வந்த லொறி ஒன்று அங்கிருந்த மக்கள் கூட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், சுமார் 80 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் துப்பாக்சூடு சம்பவம் நடைபெற்றதாகவும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் துப்பாக்கிசூடு சத்தம் கேட்டது, அதன் பின்னரே லொறி மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நைஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை

பிரான்சின் தென்பகுதி நகரான நைசில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்று இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்சின் தேசிய நாள் நிகழ்வின் போது, நேற்றிரவு பொதுமக்கள் கூட்டத்தினுள் உச்ச வேகத்தில் பாரஊர்தியைச் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சுமார் 2 கி.மீ தூரத்துக்கு வாகனம் செலுத்தப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

எனினும், பிந்திய நிலைமைகள் தொடர்பான தகவல்களுக்கான அங்குள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து பிரான்சில் அவசரநிலைப் பிரகடனம் நீடிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்- 80 பேர் பலி!! அவசரநிலைப் பிரகடனம்! இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை.. Reviewed by NEWMANNAR on July 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.