வன்னேரியில் நெற்களஞ்சியசாலை அமைத்துதர கோரிக்கை
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமத்தில் நெற்களஞ்சியசாலை அமைத்துத் தருமாறு அக்கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்கிராமம், கிளிநொச்சி நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.
இக்கிராமத்தில் தற்போது 500 வரையான குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன், வன்னேரிக்குளத்தின் கீழ் 363 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இக்கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கான வசதி இல்லை.
எனவே, நெற்களஞ்சியசாலையை அமைத்துத் தருவதுடன், நெல் உலர வைப்பதற்கான தளமொன்றினையும் அமைத்துத் தருமாறும் இக்கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சிறுபோகச் செய்கைக்கான கூட்டத்தினை நடத்துவதற்காக இக்கிராமத்துக்குச் சென்ற மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், வன்னேரிக்குளத்தின் உவர்ப் பரம்பலைத் தடுப்பதற்கும் குளத்தினை அபிவிருத்தி செய்து வன்னேரிக்குளத்தில் காணப்படுகின்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கிராம மக்களிடமும் விவசாயிகளிடமும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வன்னேரியில் நெற்களஞ்சியசாலை அமைத்துதர கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
July 15, 2016
Rating:

No comments:
Post a Comment