அண்மைய செய்திகள்

recent
-

வெறுமனே மத்தியின் கையாட்களாக வேலைசெய்து கொண்டிருக்க முடியாது -அதிகாரப் பகிர்வுக்கு காத்திருக்கிறோம் - சி.வி

தமிழ் தரப்பு அதிகாரப்பகிர்வை நோக்கி காத்திருப்பதாக உலக வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வெறுமனே நாங்கள் மத்தியின் கையாட்களாக வேலை செய்துகொண்டிருக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள் ளார்.

பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய பிரதிநிதிகளை கொண்ட உலக வங்கி பிரதி நிதிகளான பீற்றர் டி எலிஸ், சீனித்தம்பி மனோகரன், ரெசிக்கா சமல்மித், சென் ஆகியோர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து முற்பகல் பதினொரு மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது வாசல் தலத்தில் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த சந்திப்பின் போதே முதலமைச்சரினால் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் கூறுகையில்,

உலக வங்கி சார்பில் இன்றைய (நேற்றைய) தினம் பல அலுவலர்கள் வந்து சதித்திருந்தார்கள். ஒரு தரப்பினர் யாழ் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடி 55 மில்லியன் அமெரிக்க டொலர் எமக்காக உலக வங்கியால் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை கூறி சென்றுள்ளனர்.

மத்திய அரசோடு மாகாண அரசாங்கமும், மாகாண அரசின் கீழுள்ள பிரதேச சபைகளும், எவ்வாறு அபி விருத்தி தொடர்பில் நடவடிக்கைகளை ஒன்றாக எடுக்க முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம். இதன் போது மத்தி - மாகாணத்தை பொருட்படுத்துவதாக இல்லை. தன்னிச்சையாகவே நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்ற கருத்தை நாங்கள் அவருக்கு முன்வைத்திருந்தோம்.

மேலும் மத்தி - மாகாணத்தோடு இணைந்து செயற்படும் மனோபாவத்தில் இல்லை எனவும் அவ்வாறு இருந் தால் இவ்வாறன நடவடிக்கைகளை முன்னெடுக்க சிரமமாக உள்ளது எனவுக் கூறினேன்.
நாங்கள் அதிகார பகிர்வு சம்பந்தமாக எதிர்பார்ப்பதனையும், வெறுமனே நாங்கள் மத்தியின் கையாட்களாக வேலை செய்ய முடியாது எனவும் கூறினேன். இதன்போது அவர்கள் இந்தோனேசியாவில் தாங்கள் கண்ட அதிகார பரவலாக்கம் மிகவும் முக்கியமானது. உள்@ராட்சி மன்றங்கள் கூடிய வலுவோடு செயற்பட வேண்டு மானால் அதிகார பரவலாக்கம் அவசியம் என அவர்கள் கூறினார்கள்.

அதிகார பரவலாக்கம் தொடர்பில் என்னை சந்தித்த உலக வங்கி அலுவலர்களுக்கும் எமக்கும் நல்ல புரிந்துணர்வு உள்ளது. இதனை மத்திய அரசிற்கு தெரிவிப்பதில் தான் பிரச்சினை உள்ளது. இது அவர்களுடைய வேலை. நானும் மத்திய அரசிற்கு பல தடவை கூறியிருந்தேன். எங்களை எங்கள் பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்கு உதவியளியுங்கள். எங்களை கட்டுப்படுத்தாதீர்கள் என. இதனை உலக வங்கியினரும் ஏற்றுக்கொண்டார்கள் என முதலமைச்சர் தெரிவித்தார். 
வெறுமனே மத்தியின் கையாட்களாக வேலைசெய்து கொண்டிருக்க முடியாது -அதிகாரப் பகிர்வுக்கு காத்திருக்கிறோம் - சி.வி Reviewed by NEWMANNAR on July 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.