அண்மைய செய்திகள்

recent
-

மக்களது காணிகளை விடுவியுங்கள் வடக்கு இளைஞர்கள் போராட்டம்

இலங்கை இராணுவம் வசமுள்ள தமிழ் மக்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி காங்கேசன்துறை இராணுவ முகாம் முன்பாக வடக்கு இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டகாரர்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்றதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

எனினும் சம்பவ இடத்திற்கு வந்த இராணுவமும், பொலிசாரும் ஆர்ப்பாட்டகாரர்களை விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய விடாது திருப்பியனுப்பியிருந்தனர். இதனால் காங்கேசன்துறை வீதியில் உள்ள மாவிட்டபுரம் ஆலயத்திற்கு முன்பாக மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜனநாயகத் திற்கான வடக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை ஐந்து மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் நேற்று காலை வவு னியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபின்னர், ஓமந்தையிலும், பளையிலும் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் முன்பாகவும் தொடர்ச்சியாக காங்கேசன்துறையில் அமைந்துள்ள இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் இராணுவ முகாம்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவம் மக்களின் காணிகளை அப கரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன், முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக விடுதலை செய், நல்லாட்சியே மாற்றத்தை நாம் தந்தோம்;; மறந்துவிட்டாய் நம் நிலத்தை மைத்திரி அரசே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடங்கள் வரை ஒவ்வொரு இராணுவ முகாம்களுக்கு முன்பாகவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காங்கேசன்துறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இராணுவம் அண்மையில் விடுவித்த தாக அறிவித்த பகுதிக்குள் ஆர்ப்பாட்டகாரர்கள் சென்ற போதிலும், முன்னர் இராணுவ நுழைவாயில் இருந்த இடத்திற்கு முன்பாக வழிமறிக்கப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்களை அங்கிருந்து திரும்ப செல்லுமாறு பொலிசாரால் அறிவுறுத்தப்பட்டனர்.

எனினும் இதற்கு ஆர்ப்பாட்ட காரர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளே நுழைய முயன்ற போது, ஒன்றுகூடுவதற்கான அனுமதி எடுக்கப்படவில்லை ஆகையால் அத்துமீறி உள்ளே சென்றால் கைது செய்வோம் என பொலிசாரால் கூறப்பட்டதை தொடர்ந்து உள்ளே செல்வதனை தவிர்த்து மாவிட்ட புரம் கந்தசுவாமி கோவில் முன்பாக போராட்டம் தொடரப்பட்டது.

மேலும் நல்லாட்சி அரசு என வேஷம் போட்டுக்கொண்டு ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஒன்றுகூடி ஜனநாயக வழியிலான போராட்டத்தை கூட நடத்த அனுமதிக்கவில்லை.
மாறாக இராணுவமும், பொலி சாரும் எம்மை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். விடுவித்த காணிகளுக்குள் ஏன் எம்மை செல்ல விடவில்லை? இராணுவத்தின் ஆதிக்கத்தில் தான் இப் போதும் அந்த காணிகள் உள்ளனவா? என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் விசனம் வெளியிட்டனர்.
மக்களது காணிகளை விடுவியுங்கள் வடக்கு இளைஞர்கள் போராட்டம் Reviewed by NEWMANNAR on July 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.