அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விளையாட்டு மைதான புனரமைப்புக்காக நிதி வழங்கி வைப்பு-(படம்)

'இளைஞர்களின் எழுச்சியே சமூகத்தின் வளர்ச்சி' என்னும் தொனிப்பொருளை மையமாக வைத்து வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மன்னார் மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர் தனது நிதியில் இருந்து மன்னார் உப்புக்குளம் அல் பதா விளையாட்டு மைதான புனரமைப்புக்காக 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவினை இன்று திங்கட்கிழமை அல் பதா விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடம் தனது அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

மேலும் குறித்த கழகத்திற்கான விளையாட்டு சீருடையினையும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.நகுசீன்,உற்பட பலர் கலந்து கொணடமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர்-

(4-07-2016)


வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விளையாட்டு மைதான புனரமைப்புக்காக நிதி வழங்கி வைப்பு-(படம்) Reviewed by NEWMANNAR on July 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.