தமிழ் பிரதேசங்களில் தொடர்ந்தும் சிங்கள மொழி. நல்லாட்சியில் தீர்வு கிடைக்குமா?
இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் போக்குவரத்து விதிமுறைகள் வழுவின்போது சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக போக்குவரத்து பொலிசாரால் வழங்கப்படும் பத்திரத்தின் விடயங்கள் சிங்கள மொழி மூலமே எழுதப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சிங்களத்தில் எழுதப்படும்போது அதனை வாசித்தறிய முடியாமல் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். சிங்கள மொழியில் எழுதப்படும் குற்றங்கள் தான் புரிந்த குற்றமா அல்லது புரியாத குற்றமா என அறியமுடியாமல் ஏமாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர்.
அரசாங்க உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழி பரீட்சையில் சித்தி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் ஏன் இன்னும் தமிழ் பிரதேசங்களில் பத்திரம் தமிழில் எழுதப்படுவதில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழில் எழுதுவது இயலாமல் போனாலும் ஆங்கிலத்தில் எழுதப்படும்போதாவது மக்கள் ஓரளவாயினும் புரிந்து கொள்ளக்கூடியதாய் அமையும்.
தமிழ் பேசும் மக்களால் தெரிவுசெய்து அரசியலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரசியல்வாதிகள் இதனைக் கருத்திற்கொண்டு இதற்குரிய தீர்வினைப்பெற நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? நல்லாட்சி நிலவும் இக்காலகட்டத்தில் இதற்குரிய தீர்வு இன்னும் கிடைக்கப்பெறாமல் மக்கள் தொடர்ந்தும் இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்தவண்ணமே உள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
July 05, 2016
Rating:

No comments:
Post a Comment