அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற தொழில் சந்தை நிகழ்வு-அமைச்சரின் வருகை தாமதத்தினால் பலதரப்பட்டவர்களும் அசௌகரியம்.(படம்)



மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்ளம் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த மாபெரும் தொழில் சந்தை இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தொழில் மற்றும் தொழில் சங்க தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர கலந்து கொண்டார்.

இதன் போது தொழில் சந்தைகளை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தமது சுய விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

-குறித்த நிகழ்விற்கு தொழில் மற்றும் தொழில் சங்க தொடர் பாடல் அமைச்சின் செயலாளர் சுனில் அபேவர்த்தன, தொழில் மற்றும் தொழில் சங்க தொடர் பாடல் அமைச்சின் பனிப்பாளர் நாயகம் தர்மசேன உற்பட திணைக்கள தலைவர்கள்,பிரதேசச் செயலாளர்கள்,மாவட்டச் செயலகத்தின் உ;ததியோகஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்,யுவதிகள் பன பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

-குறித்த தொழில் சந்தை நிகழ்வு காலை 8.30 மணிக்கு வைபவ ரீதியாக இடம் பெறவுள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அமைச்சரின் வருகை தாமதித்த நிலையில் காலை 11 மணியளவில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது.இதனால் நேரத்துடன் வருகை தந்த பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.











மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற தொழில் சந்தை நிகழ்வு-அமைச்சரின் வருகை தாமதத்தினால் பலதரப்பட்டவர்களும் அசௌகரியம்.(படம்) Reviewed by NEWMANNAR on July 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.