நாமலுக்கு சிறைச்சாலைக்குள் சொகுசு மெத்தை, தலையணை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து தருவித்துக் கொண்டுள்ள சொகுசு மெத்தையொன்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற 70 மில்லியன் ரூபா நிதிமோசடி தொடர்பில் கைது செய் யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போது கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் அவருக்கு ஜே சிறைக்கூடம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு அறை மற்றும் அதற்கான தனியான குளியலறை உள்ளிட்ட வசதிகளும், நாமல் ராஜபக்ஷவை மற்றவர்கள் சந்திக்க முடியாத பாதுகாப்பு வசதிகளும் இந்த சிறைக்கூடத்தில் உள்ளது.
இந்நிலையில் நாமல் ராஜபக்ஷவைப் பரிசோதித்த சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவர்களின் சிபாரிசுக்கமைய அவருக்கு சொகுசு மெத்தையொன்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர் தன் வீட்டிலிருந்து சொகுசு மெத்தையொன்றை தருவித்துக் கொண்டுள்ளார். அதனை உள்ளே எடுத்து வந்து பயன்படுத்திக் கொள்ள சிறைச்சாலை நிர்வாகமும் அனுமதியளித்துள்ளது.
எனினும், நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் சிறைச்சாலை நிர்வாகம் வழங்கிய தலையணையை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமலுக்கு சிறைச்சாலைக்குள் சொகுசு மெத்தை, தலையணை!
Reviewed by NEWMANNAR
on
July 16, 2016
Rating:

No comments:
Post a Comment