அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (13-07-2016) கேள்வி பதில்


கேள்வி:−

             போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமான சட்டத்தரணி SuthanLaw அண்ணா!முதலில் தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்.சுதன் அண்ணா! நான் மட்டக்களப்பு குருமன்வெளியிலிருந்து உங்கள் தீவிர அபிமானி.அண்ணா ஆசை கொள்ளுவது பாவமா?சாபமா?இதற்கான விளக்கத்தினை "ஆசை பிடித்து அலையும் அனைவருக்கும் புரியும் படி கூறுங்கள்.

பதில்:−

           எனது பெரும் அன்பிற்குரிய வாசகியே! ஆசை என்பது ஒருவகை மனநோயேயாகும்.அதிகமானால் நம்மையே அழித்துவிடும்.அதனை விளக்குவது கடினம்.இருப்பினும் புரியும்படி கூறுகிறேன்.

வீதியில் நடந்து செல்கின்ற ஒருவர் தனக்கு அருகில் செல்லுகின்ற சைக்கிளை பார்த்து "தனக்கு சைக்கிலிருந்தால் நல்லது" என்று தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினை கொடுத்து சைக்கிள் வேண்டுகிறார்.சைக்கிளில் சென்ற அவன் தனக்கு அருகில் சென்ற மோட்டார் சைக்கிளை கண்டு ஆசைப்பட்டு தனது வீட்டை விற்று மோட்டார் சைக்கில் வேண்டுகிறான்.பின்பு,பக்கத்தில் சென்ற காரை கண்டு ஆசைப்பட்டு கடன் வேண்டி காரை வேண்டுகிறார்.காரில் சென்று கொண்டிருக்கும் போது தனக்கு மேலாக போன ஆகாய விமானத்தை கண்டு,ஆசைப்பட்டு மேலே அண்ணாந்து பாத்த போது, அவனது கார் மரத்தில் மோதி விபத்தில் அவரது இரண்டு கால்களும் அகற்றப்பட்டு இறுதியில் சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருக்கும் போது அவனுக்கு அருகில் நடத்து போய் கொண்டிருந்தவரை பார்த்து யோசிக்கிறான் "நான் நடந்து போன மாதிரியே போயிருத்தால் எனது கால்கள் என்னிடமிருந்திரூக்கும்.எனக்கு இந்த நிலை வந்திருக்காது" என்ற எண்ணி சுடலை ஞானத்தினை பெறுகின்றார்.

மிகவும் கஷ்டப்பட்ட விறகு வெட்டும் ஒருவர் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக விறகு வெட்டி வாழ்ந்தான்.ஒரு முறை விறகு வெட்டிக் கொண்டிருக்கும் போது தனது கோடரியை ஆற்றில் தொலைத்தமையினால் அழுது புலம்பி கடவுளை வேண்டுகிறான்.கடவுள் அவன் முன் தோன்றி காரணம் கேட்கிறார்.தனது ஒரேயொரு கோடாரி தொலைந்ததாக கூற அவனை சோதிப்பதற்காக முதலில் வெள்ளியிலான கோடரியை காண்பித்து "இதுவா உனது கோடாரி" என்று கேட்க அவனும் "இல்லை" என்கின்றான்.பின் தங்கத்தினாலான கோடாரியை காண்பிக்க அவனும் "இல்லை" என்று மறுக்கிறான்.இறுதியில் அவனது கோடாரியினை காண்பிக்க அவனும் "இதுதான்" என்று கூற கடவுள் அவனது நேர்மையைப் பார்த்து மூன்று கோடரியையும் அவனுக்கே கொடுத்துவிட்டு செல்கிறார்.அதனை வைத்து அவன் பிற்காலத்தில் பணக்காரனாகி,மனைவி பிள்ளைகளுடன் கோயில் திருவிழாவிற்கு சென்ற போது தனது மனைவியை தொலைத்து விடுகின்றான்.உடனே கடவுளை கூப்பிட்டு கடவுளிடம் விடயத்தினை கூறுகிறான்.கடவுள் மீண்டும் இவனை சோதிப்பதற்காக முதலில் ரம்பாவினை காண்பித்து "இதுவா உன் மனைவி "என்று கேட்க சற்று யோசித்த பின் அவன்" ஆம் சுவாமி.இவள்தான் எனது மனைவி "என்கின்றான்.கடவுள் அதிர்ச்சியடைந்து உன்னை நல்லவன் என்று நினைத்தேனே,அழகிய பெண்ணைக் கண்டபோது மனசு மாறிவிட்டாயே"என்று கடவுள் அவனிடம் கேட்ட போது அதற்கு அவன்" போங்க சுவாமி தாங்கள் ஆரம்பத்தில் ரம்பாவை கொண்டு வருவீர்கள்.பின் ஊர்வசி.பின் என் மனைவி.என்று மூன்று பேரையும் காண்பிப்பீர்கள்.நான் என் மனைவியினை காண்பித்தாலும் இறுதியில் மூவரையும் நீயே வைத்துக் கொள் என்று என்னிடமே தந்துவிட்டு சென்றுவிடுவீர்கள்.ஒரு மனைவியை வைத்துக் கொண்டே நான் இவ்வளவு பாடுகள் படுகிறேன்.மூன்று பேரையும் எவ்வாறு சமாளிப்பேன் "என்று கடவுளிடம் கேட்கிறான்.ஆகவே ஆசைகள் ஒரு வரையறைக்குள் இருந்தால் அனைத்தும் சொர்க்கமேயாகும்.



குறிப்பு 
உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.


அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.



கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி

newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .



இன்றைய (13-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.