அமெரிக்காவில் சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை! ஹிலாரிக்கு ஆதரவாக சாண்டர்ஸ்...
அமெரிக்க அதிபர் தேர்தலில், தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக்க, பெர்னி சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், ஹிலாரி வெற்றி பெறுவதை உறுதி செய்ய தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வதாக சாண்டர்ஸ் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதை தடுப்பது மிகவும் முக்கியம் என்றும் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு செனட்டர்களும் ஒன்றாக தோன்றியது, இதுவே முதல் முறையாகும்.
அதிபர் தேர்தலில் போட்டியிட தனது கட்சியின் நியமனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, ஹிலாரி கிளிண்டனை சாண்டர்ஸ் அடிக்கடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாண்டர்ஸின் ஆதரவாளர்கள் சிலரை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டிரம்ப் , சாண்டர்ஸ் ஒரு மோசடி அமைப்பில் சேர்ந்து விட்டதாக டிவிட்டர் வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை! ஹிலாரிக்கு ஆதரவாக சாண்டர்ஸ்...
Reviewed by Author
on
July 13, 2016
Rating:

No comments:
Post a Comment