விபத்தில் தந்தை மகன் பலி :தாயும் மகளும் படுகாயம்
அம்பாறை பொத்தவில் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயம் அடைந்துள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் திருக்கோவில் - 02 நீதிமன்ற வீதியை சேர்ந்த ஜெயந்திரன் (வயது35) மகன் கஜேய் (வயது 8) ஆகிய இருவருமே பலியாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
விபத்தில் தந்தை மகன் பலி :தாயும் மகளும் படுகாயம்
Reviewed by NEWMANNAR
on
July 20, 2016
Rating:

No comments:
Post a Comment