அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் போராளி சடலமாக மீட்பு

அச்சுவேலி வடக்கு, வல்லை பகுதியிலுள்ள வளவு ஒன்றிலிருந்து முன்னாள் போராளி ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியினை சேர்ந்த அச்சுவேலி தனியார் பஸ் ஒன்றில் நட த்துநராக கடமையாற்றும் குடும்பிநாதன் விஜயநாதன் (வயது 27) என பொலிஸார் கூறினர்.

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டனர்.

மேற்படி இளைஞன் தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர் பில் விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளுக்காக சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
முன்னாள் போராளி சடலமாக மீட்பு Reviewed by NEWMANNAR on July 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.