நாடாளவிய ரீதியில் வைத்தியர்களின் அடையாள வேலை நிறுத்தம்
இன்று முற்பகல் 08.00 தொடக்கம் நண்பகல் 12.00 வரை அடையாள வேலை நிறுத்தத்தினை வைத்தியர்கள் நாடு முழுவதும் மேற்கொண்டனர். மாலபே இல் ஆரம்பிக்கப்பட்ட தனியார் மருத்துவ பீடத்தில் பயிலும் மாணவர்களை அரச மருத்துவ சபையில் பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல மருத்துவமனைகளின் செயற்பாடு ஸ்தம்பித்து காணப்படுவதுடன், நோயாளிகளும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். தூர இடங்களில் இருந்து கிளினிக் சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு எந்தவித முன்னறிவித்தல்களும் வழங்கப் படாத்தால் அவர்கள் சிகிச்சைக்கென வருகை தந்து காத்துக் கொண்டிருக்கும் காட்சிகளும் காணக்கூடியதாய் உள்ளது. இருந்தபோதிலும் சில மருத்துவமனைகளில் வழமை போலவே பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவ பீடத்தில் பணம் உள்ள ஓரளவு திறமையான யாவரும் பயின்று வைத்தியராகலாம். இதனால் மருத்துவம் தரம் குறைந்து போக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படும் அதே நேரத்தில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் படித்துவிட்டு வரும் மருத்துவ மாணவர்களை இங்கு பதிவு செய்து வைத்தியராக ஏற்றுக்கொள்ளும்போது, ஏன் இங்குள்ள தனியார் பீடத்தில் பயில்வோரை இணைத்துக்கொள்ள முடியாது என இன்னொரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
எவ்வாறாயினும், பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் செயற்பாடுகள் அமைவது வரவேற்கத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
July 04, 2016
Rating:
No comments:
Post a Comment