அவுஸ்திரேலியாவை நசுக்கிய இலங்கை: காலி டெஸ்டின் வருமானம் எவ்வளவு தெரியுமா?
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அபார வெற்றி பெற்ற இலங்கை 2-0 என கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்தப் போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்தனர். இதனால் இந்தப் போட்டியில் மூலம் 2.9 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சுமதிபால தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு கிடைத்ததை விட இது அதிகமாகும்.
கடைசியாக நடைபெற்ற இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது ரூ. 2.29 லட்சமும், பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியின் போது ரூ. 31,900 வருவாயாக கிடைத்ததாக சுமதிபால தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை நசுக்கிய இலங்கை: காலி டெஸ்டின் வருமானம் எவ்வளவு தெரியுமா?
Reviewed by Author
on
August 13, 2016
Rating:

No comments:
Post a Comment