தேனிலவுக்கு செல்ல திட்டமிட்ட இளம்பெண்: 12 வருடங்கள் சிறை விதித்த நீதிமன்றம்....
அமெரிக்கா நாட்டில் காதலனுடன் தேனிலவுக்கு செல்வதாக கூறி ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைய திட்டமிட்ட இளம்பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 12 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மிசிசிபி நகரில் வசித்து வரும் Jaelyn Young(20) என்ற இளம்பெண் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்.
பின்னர், ஓன்லைன் மூலமாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் வீடியோக்களை பார்த்து அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.
இவருக்கு காதலராக அமைந்த Muhammad Dakhlalla(22) என்பவரையும் மூளைச் சலவை செய்து அவரையும் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவராக மாற்றியுள்ளார்.
மேலும், காதலனுடன் தேனிலவுக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் சிரியா புறப்பட்ட இருவரையும் பொலிசார் விமான நிலையத்திலேயே கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது கடந்த மே மாதம் இவர் குற்றம் புரிந்தவர் என்பது நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில், இளம்பெண் மீதான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. மேலும், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணும் அவரது பெற்றோர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டு கருணை காட்ட வேண்டும் என நீதிபதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தேனிலவு என்ற போர்வையில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த இளம்பெண்ணிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், காதலன் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கான தண்டனை விபரம் எதிர்வரும் ஆகஸ்ட் 24ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தேனிலவுக்கு செல்ல திட்டமிட்ட இளம்பெண்: 12 வருடங்கள் சிறை விதித்த நீதிமன்றம்....
Reviewed by Author
on
August 13, 2016
Rating:

No comments:
Post a Comment