அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சில் முஸ்லீம் பெண்கள் நீச்சலுடை அணிய தடை....


பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன் நகரில், முஸ்லீம் பெண்கள் முழு நீச்சல் உடை அணிந்து கொள்வதற்கு தடை விதித்து அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் அந்நாட்டு மக்கள் நிம்மதி இழந்து போயுள்ளனர்.

தாக்குதல்களை தடுக்க பிரான்ஸ் அரசு தவறிவிட்டது என அந்நாட்டின் ஜனாதிபதி மீதும் பல்வேறு விதங்களில் மக்கள் தங்கள் கோபத்தை காட்டிவருகின்றனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டிய சூழலில் பிரான்ஸ் அரசு உள்ளது.

இந்த வகையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரான்சில் உள்ள கேன் நகரின் கடற்கரை மற்றும் நீச்சல்குளங்களில் முழு உடலையும் மறைக்கும்படி இருக்கும் புர்கினி நீச்சல் உடையை அணிய முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி முழு நீச்சல் உடை அணிபவர்களுக்கு 40 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் மத அடையாளங்களுக்கு இடமில்லை எனவும், ஏற்கனவே மத வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், பொது இடங்களில் மதக்குறியீடுகளை வெளிப்படுத்துவது வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கேன் நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் முஸ்லீம் பெண்கள் நீச்சலுடை அணிய தடை.... Reviewed by Author on August 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.