மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் புனித ஸ்தலமான மடுத்திருப்பதி விழா----
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும்புனித ஸ்தலமான மடுத்திருப்பதி விழா எதிர்வரும் 15ந் திகதி கொண்டாடப்படுகிறது
இவ் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 6ந் திகதி (06.08.2016) பிற்பகல் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை பாப்பரசர் கொடியையும் மடு பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் மடுத்திருப்பதி கொடியையும் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஒன்பது தினங்கள் திருவிழா நவநாட்கள் நடைபெற்று வருகின்றன.
நாளை14-08-2016 ஞாயிற்றுக் கிழமை நவநாட்களின் இறுதி நாளன்று நற்கருணை விழாவாக கொண்டாப்பட்டு திருப்பவனியும் இடம்பெறும்.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் தலைமையில் நடைபெறும் பெருவிழாவின் தினமாகிய 15ந் திகதி (15.08.2016) காலை 6.15 மணிக்கு நடைபெறும் திருப்பலியானது கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் அதிமேதகு மல்கம் றஞ்சித் தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகைஇ யாழ் ஓய்வுபெற்ற ஆயர் மேதகு தோமாஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணான்டோ ஆண்டகைஇ குருநாகல் ஆயர் கரோல் அன்ரனி பெரேரா ஆண்டகை. அனுராதபுரம் ஆயர் நோபேட் அன்றாடி ஆண்டகைஇ காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகைகளுடன் இணைந்து அருட்பணியாளர்களும் திருப்பலி ஒப்புக்கொடுப்பர்.
இவ் பெருவிழாவுக்கு இம்முறை சுமார் ஐந்து இலட்சம் பக்தர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்து பக்தர்களின் நலன்கருதி அதற்கேற்றவாறு அத்தியாவசிய தேவைகள் ஒழுங்குப்படுத்தியிருப்பதாக மடு பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ் அடிகளார் தெரிவித்தார்.
தற்பொழுது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்...
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் புனித ஸ்தலமான மடுத்திருப்பதி விழா----
Reviewed by Author
on
August 13, 2016
Rating:

No comments:
Post a Comment