ஒலிம்பிக் ஆச்சர்யம்: தனது பால்ய வயது ஹீரோவை வீழ்த்திய நீச்சல் வீரர்!
மைகேல் பெல்ப்ஸ். அமெரிக்காவின் தங்கமகன் என்றே கூறலாம். அமெரிக்கா சார்பாக இவர் நீச்சல் போட்டிகளில் பங்கேற்கிறார். இதுவரை மூன்று ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இவருக்கு, ரியோ ஒலிம்பிக்ஸ் நான்காவது ஒலிம்பிக்ஸ்.
2004 ம் ஆண்டு நடந்த அதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கம், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம், கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கம், தற்போது நடந்து கோண்டிருக்கும் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கம் வென்று மொத்தம் 22 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை தன் கழுத்தில் சூடிய இவருக்கு, இன்று நடந்த 100மீ பட்டாம்பூச்சி(Butterfly) நீச்சல் போட்டி “யானைக்கும் அடி சருக்கும்” என்ற பழமொழியை எடுத்துக் கூறியுள்ளது.
'இதுவரை ஒலிம்பிக்கில் 22 தங்கம், இவரை வீழ்த்த யாராலும் முடியாது' என்பதை முறியடித்துள்ளார் சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூலிங். யார் இந்த ஜோசப் ஸ்கூலிங்? ரியோ ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் நாட்டிற்க்காக 100மீ பட்டாம்பூச்சி (Butterfly) நீச்சல் போட்டியில் பங்கேற்ற 21வயதான இளம் நீச்சல் வீரர். இவர் பங்கேற்ற பிரிவிற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இவர் பெல்ப்ஸ் என்ற நீச்சல் ஜாம்பவானுடன் போட்டி போட்டார். பெல்ப்ஸ்தான் தங்கம் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்த நேரத்தில் யாருமே எண்ணிப் பார்க்காத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. 50.39வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து, பெல்ப்ஸை பின்னுக்குத் தள்ளி தனக்கான, தன் தாய் நாட்டிற்கான முதல் தங்கத்தை வென்றார் ஸ்கூலிங். சிங்கப்பூர் நாட்டிற்காக முதல் தங்கம் வென்ற வீரர் இவர்தான் என்ற பெருமையை இந்த வெற்றியின் மூலமாக பெற்றுள்ளார் ஸ்கூலிங்.
இது குறித்து ஸ்கூலிங், “பெல்ப்ஸ், தான் பயிற்சி பெற்ற ஒரு கிளப்பிற்கு வந்துள்ளார். அது ஒரு காலை நேரம். அனைவரும், “மைக்கேல் பெல்ப்ஸ்... மைக்கேல் பெல்ப்ஸ்!” என்ற ஆரவாரத்துடன் அவரை நோக்கி ஓடினர். எனக்கு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அந்த காலைப் பொழுது மிகவும் ஆச்சர்யத்தை தந்தது. என்ன பேசுவது என்றே தெரியவில்லை." எனக் கூறினார்.
இந்த சம்பவம் 8 வருடங்களுக்கு முன் நடந்தது. எட்டு வருடங்களுக்கு முன் பெல்ப்ஸை குழந்தையாக சந்தித்த ஸ்கூலிங், இன்று அவரையே ஒரு சக போட்டியாளராக சந்தித்து, வீழ்த்தி, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக் ஆச்சர்யம்: தனது பால்ய வயது ஹீரோவை வீழ்த்திய நீச்சல் வீரர்!
Reviewed by Author
on
August 14, 2016
Rating:
Reviewed by Author
on
August 14, 2016
Rating:


No comments:
Post a Comment