அரசியல் கைதிகளை சந்தித்த அடைக்கலநாதன்!
உயிருடன் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காதஅரசாங்கம் எவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்போகின்றது எனஅரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அநுராதபரம் சிறைச்சாலைக்கு இன்று சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளைசந்தித்து கலந்துரையாடினார்.
அதன்போதே அரசியல் கைதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் 08ஆம் திகதி அரசியல் கைதிகள் அடையாளஉண்ணாவிரத பேராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளமை குறித்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினையும்கையளித்துள்ளனர்.
அந்த கடிததத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரையில்நிறைவேற்றப்படவில்லை.
10 முதல் 15 வருடங்கள் சிறைச்சாலைகளில் மோசமானநிலமைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கானநடவடிக்கையினை எடுக்ககவில்லை.
விசேட நீதிமன்றங்கள் அமைத்து விசாரணை செய்வதென்பதுதமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு.
ஆட்சி மாற்றம் வந்தாலும், அரச நிர்வாக மாற்றம் இல்லை. தமிழ் பிரதேச வழக்குகளைசிங்கள பிரதேச வழக்குதாக்கல் மற்றும் அரசியல் கைதிகளின் வழக்கின் கால எல்லைகள் 3மாத காலத்திற்கு தள்ளிப்போடுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
பாதுகாப்புஅமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் கீழ் செயற்பட்டவர்களேதற்போதும், சட்டமா அதிபர் திணைக்களம் இருக்கின்றார்கள்.
சிறையில் உயிருடன்இருப்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் காணாமல் போனோர்களுக்கு நடவடிக்கைஎடுக்கப் போகின்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்;.அரசாங்கம் செய்வதாக கூறிய எந்த வேலைத்திட்டங்களையும் செய்யவில்லை.
வேலைத்திட்டங்களை செய்வதில் தாமதம் காணப்படுகின்றது. எதிர்பார்த்தளவிற்குமுன்னேற்றம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆத்துடன், தமது விடுதலைக்கான சரியான முறையில் தீர்;வு கிடைக்காதவிடின், பாரிய அளவிலானபோராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், நிரந்தர தீர்வு பெற்றுத்தரவலியுறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடிய பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துகலந்துரையாடி உறுதியான தீர்வு பெற்றுத்தெருவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் உறுதியளித்துள்ளார்.
அரசியல் கைதிகளை சந்தித்த அடைக்கலநாதன்!
Reviewed by Author
on
August 06, 2016
Rating:

No comments:
Post a Comment