பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியினை கடற்படைக்கு வழங்க நில அளவை செய்யும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்களின் காணியை கடற்படையினருக்கு வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட இருந்த நில அளவீட்டு நடவடிக்கைகளுக்கு மன்னார் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்துள்ளது.
-பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் நிலை கொண்டுள்ள குறித்த காணியினை கடற்படைக்கு வழங்க தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததோடு,நில அளவையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
-குறித்த நில அளவை செய்யும் நடவடிக்கைகக்கு பள்ளிமுனை கிராம மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்றினைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
-இறுதியாக மன்னார் பிரதேசச் செயலாளருக்கு விடுக்கப்பட்ட உயர் அதிகாரிகளின் உத்தரவிற்கு அமைவாக கடந்த மாதம் 23 ஆம் திகதி நில அளவை திணைக்களத்தின் அதிகாரிகள் மன்னார் பள்ளிமுனை கிராமத்திற்கு விருகை தந்த குறித்த காணியை நில அளவை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
எனினும் மள்ளிமுனை கிராம மக்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் குறித்த காணியை நில அளவை செய்வதை தடுத்ததோடு,அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.
இதன் போது குறித்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் மக்களின் எதிர்ப்பை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியமையினை தொடர்ந்து நீதிமன்றத்தின் தடை உத்தரவை பெற்றுக்கொள்ள இரண்டு வரா கால அவகாசம் வழங்கப்பட்டதோடு,நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுக்கொள்ளாது விட்டால் பொலிஸாரின் பாதகாப்புடன் நில அளவைகள் மேற்கொள்ளப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.
-இந்த நிலையில் மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட வாழ்நது வரும் 19 பேரும் கடந்த திங்கள் கிழமை (5) சட்டத்ரணி மூலம் மன்னார் நீதிமன்றில் இவ் காணியை அளவீடு செய்ய தடை உத்தரவு வழங்கும் படி மன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதன் போது பள்ளிமுனை மக்களின் 25 வீட்டுத்திட்ட குடியிருப்பு காணியில் கடற்படையினர் குடியிருந்து கொண்டு குறித்த காணியை தங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த காணி பிரச்சினை குறித்த குறித்த 25 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 19 பேர் மன்னார் நீதிமன்றில் கடந்த 11.02.2013 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவ் வழக்குகள் தற்பொழுது மன்றில் விசாரனைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றது.
எனினும் பள்ளிமுனை கடற்படை முகாமிற்காக பொறுப்பதிகாரிகள் திடீர் திடீர் என மாற்றம் பெற்று வருவதனால் இவர்களின் பெயர்களை மன்றில் மாற்றத்துக்கு உள்ளாகி வருவதனால் இவ் வழக்கு தொடர்ந்தும் நிலுவையிலேயே இருந்து வருவதுடன் தவணையிடப்பட்டு வருவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.
-இந்த நிலையில் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியை நில அளவை செய்து அதனை விஸ்தரித்து கடற்படையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் நிலையில் மக்கள் ஒன்றிணைந்து காணி அளவீட்டை நிறுத்தியமை தொடர்பில் மன்னார் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதுடன், மீண்டும் குறித்த காணியை நில அளவை செய்ய கடந்த 6 ஆம் திகதி(6-09-2016) வரை நில அளவை அதிகாரிகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,நீதிமன் ற தடை உத்தரவு வழங்கப்படாது விட்டால் குறித்த காணி நில அளவீடு செய்யப்பட்டு கடற்படைக்கு வழங்கப்படும் எனவும் மன்றில் தெரிவித்தனர்.
எனவே குறித்த காணி தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைகள் இடம் பெற்று வரும் நிலையில்,குறித்த காணியை நில அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பிக்குமாறு சட்டத்தரனி த.வினோதன் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் சார்பாக மன்றில் தெரிவித்தார்.
-சட்டத்தரணியினால் மன்றில் சமர்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா குறித்த காணியின் வழக்கு முடிவுக்கு கொண்டு வரும் வரை இரண்டு தரப்பினரும்,குறித்த காணியில் எந்த விதமான அபிவிருத்தி வேளைகளையும் முன்னெடுக்க இடைக்கால தடையுத்தரவை வழங்கினார்..
-மன்னார் நிருபர்-

Reviewed by Author
on
September 07, 2016
Rating:

No comments:
Post a Comment