சிகரட்டின் விலை 55 ரூபாவாக உயர்த்தப்படும்....
சிகரட் ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தற்போது சிகரட் ஒன்றின் விலைகளை 7 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இந்த சிகரட்டுக்கு 15 வீதம் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்ட பின்னர், சிகரட்டின் விலை 55 ரூபாவா அதிகரிக்கும்.
தற்போது சிகரட் ஒன்றின் விலை 42 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பீடி மற்றும் சுருட்டு விலைகள் அதிகரிக்கப்படவில்லை.
சிகரட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், சிகரட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 4 முதல் 5 வீதமாக குறைந்துள்ளது.
புகையிலை மூலம் கிடைக்கும் வரி வருமானம் மூலம் சுகாதார சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள சகல பெறுமதி சேர் வரிகளை குறைக்கும் யோசனை தான் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
சிகரட்டின் விலை 55 ரூபாவாக உயர்த்தப்படும்....
Reviewed by Author
on
October 22, 2016
Rating:

No comments:
Post a Comment