மான் தாக்கி பெண் காயம்
அக்கரப்பத்தனை - லோவர் கிரன்லி தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த பெண் தொழிலாளர் ஒருவரை அப்பகுதியில் மேய்ந்து கொண்டியிருந்த மான் தாக்கியதால் குறித்த பெண் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர் 55 வயதுடைய ஜெயராமன் ஜெயராணி என தெரியவந்துள்ளது.
பெருந்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதால் தேயிலை மலைகளில் விஷப்பூச்சிகள், விசபாம்புகள், அட்டை, சிறுத்தை, காட்டு எருமை, குளவி என்பன தேயிலை செடிகளில் வாழ்வதால் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் தொழில் செய்யவேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட நிர்வாகம் தேயிலை மலைகளை முறையாக பராமரிப்பு செய்யவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மான் தாக்கி பெண் காயம்
Reviewed by NEWMANNAR
on
October 13, 2016
Rating:

No comments:
Post a Comment