அண்மைய செய்திகள்

recent
-

அன்று ஈழத்து அகதி - இன்று அவுஸ்திரேலிய இராணுவ மேஜர்..!


புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லவன் என்று அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா என்ற ஈழ அகதி ஒருவரே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் இராணுவ மேஜராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிட தஞ்சம் கோரி சென்ற அவர் தற்போது இராணுவ மேஜராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேஜர் தர்மராஜாவின் நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம்.

கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம். எனினும், லவன் தனது பயணம் குறித்து ஒருபோதும் சொன்னதில்லை.

அவருடைய இந்தப் பயணம் தனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றேன் என கூறியுள்ளார்.

தற்போது அகதிகள் தொடர்பாக மக்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் மேஜர் தர்மராஜ் என அழைக்கப்படும் லவனிடமிருந்து நான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்.

அவருடைய எளிமையான வாழ்க்கைத் தத்துவம் தன்னை அவரிடம் கட்டிப்போட்டுள்ளது. லவன் தன்னுடைய பயணத்தின் அடுத்த கட்டத்தில் இருப்பதையிட்டு நான் பெருமைப்படுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அன்று ஈழத்து அகதி - இன்று அவுஸ்திரேலிய இராணுவ மேஜர்..! Reviewed by Author on October 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.