மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு: வடக்கின் நிதி எவ்வளவு தெரியுமா?
இலங்கையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்காக, 214.123 பில்லியன் ரூபாவினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்:
வடக்கு மாகாண சபைக்கு 22.094 பில்லியன் ரூபாயும்,
கிழக்கு மாகாண சபைக்கு 20.103 பில்லியன் ரூபாயும்,
மேல் மாகாண சபைக்கு 16.516 பில்லியன் ரூபாயும்,
மத்திய மாகாண சபைக்கு 24.712 பில்லியன் ரூபாயும்,
தென் மாகாண சபைக்கு 21.04 பில்லியன் ரூபாயும்,
வடமேல் மாகாண சபைக்கு 23.87 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை வட மத்திய மாகாண சபைக்கு 16.14 பில்லியன் ரூபாயும்,
ஊவா மாகாண சபைக்கு 18.82 பில்லியன் ரூபாயும்,
சப்ரகமுவ மாகாண சபைக்கு 21.65 பில்லியன் ரூபாயும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு: வடக்கின் நிதி எவ்வளவு தெரியுமா?
Reviewed by Author
on
October 21, 2016
Rating:

No comments:
Post a Comment