மம்மியான துறவி! தங்க சிலையை உருவெடுத்தது எப்படி?
புத்தமதத்துக்கு பெரும் பங்காற்றிய ஒரு துறவியின் சடலத்தை பதனீடு செய்து பின்னர் அதை தங்க முலாம் பூசிய சிலையாக மாற்றி அங்குள்ள கோவிலில் வைத்துள்ள நிகழ்வு சீனாவில் அரங்கேறியுள்ளது.
சீன நாட்டில் உள்ள குஹான்சூ நகரில் Chongfu Temple என்னும் ஆலயம் அமைந்துள்ளது.
அங்கு Fu Hou என்னும் புத்த மத துறவி தன் இறுதிகாலமான 94 வயது வரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வந்தார், அந்த துறவி கடந்த 2012 ஆம் ஆண்டு காலமானார்.
அவர் அந்த கோவில் தங்கியபடியே தன் வாழ்நாள் முழுக்க புத்த மதத்துக்கு ஆற்றிய சேவை பணியை கெளரவிக்கும் விதமாக ஒரு மிகப்பெரிய விடயத்தை செய்ய கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி அவர் இறந்து நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது அவரின் சடலத்தை எடுத்து அதை முழுவதும் கழுவி அதை பதனீடு ஸ்பெஷலிஸ்ட்கள் மூலம் சடலத்தை பதனீடு செய்தனர்.
பின்னர் அவர் சடலத்தை பெரிய ஜாடியில் உட்காரும் நிலையில் மூடிவைத்தனர். பின்னர் அதை வெளியில் எடுத்து தங்க முலாம் பூசி ஒரு தங்க சிலையாக வடிவமைத்தார்கள்.
பின்னர் அது முன்னேர்கள் புனித அறையின் இடத்தில் வைக்கப்பட்டது.
இது பற்றி கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், Fu Hou புத்த மதத்துக்கு ஆற்றிய பங்கு மிக பெரியது.
அவரின் சீடர்கள் அவர் மேல் மிகுந்த அன்பையும், மரியாதையையும் கொண்டுள்ளனர். இதனால் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இதை நாங்கள் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மம்மியான துறவி! தங்க சிலையை உருவெடுத்தது எப்படி?
Reviewed by Author
on
October 21, 2016
Rating:

No comments:
Post a Comment