பெண் பொலிஸ் அதிகாரிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் மேலதிகாரிகள்....
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் இருந்து பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இடம்பெற்ற செய்தியாளர் கலந்துரையாடலின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கலந்துரையாடல், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹேட்டிகேவின் தலைமைத்துவத்தில் இடம்பெற்றுள்ளது.
பெண் அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்காக முறையான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது வரையில் நாடு முழுவதும் 9 மாவட்டங்களில் செயற்படும் பெண் அதிகாரிகளின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு 9 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹேட்டிகே தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை ஆண் அதிகாரிகளுக்கு கூற முடியாதென்பதனால் பெண் அதிகாரிகளை அதற்காக நியமிப்பதற்காகவும், அதன் ஊடாக பெண் அதிகாரிகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் பொலிஸ் அதிகாரிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் மேலதிகாரிகள்....
Reviewed by Author
on
October 13, 2016
Rating:

No comments:
Post a Comment