அண்மைய செய்திகள்

recent
-

2017 வரவு செலவு திட்டம் ஒரே பார்வையில்


05:11:36 – 2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாசிப்பினை நிறைவு செய்தார் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க
05:09:12 – நாட்டிலுள்ள பாரிய 100 தனியார் கம்பனிகளை அரசாங்கத்துடன் இணைய கோரிக்கை – நிதியமைச்சர்
05:06:40 – இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்க தீர்மானம்
05:04:59 – பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள்
05:03:20 – இணையத்தளத்தின் ஊடாக இடம்பெறும் வணிக செயற்பாடுகளுக்கு வரி
05:02:01 – ATM மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது
05:00:34 – 100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு
04:59:47 – கார்பனுக்கு புதிய வரி
04:59:35 – சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி
04:58:00 – 425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ‌ரூபாய்.
04:51:49 – இரவு 9 மணிக்குப்பிறகு, அதிவேக நெடுஞ்சாலை கட்டணத்தில் 50 ரூபாய் குறைக்கப்படும்
04:50:35 – சிறு குளங்களின் புனரமைப்பிற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04:48:57 – பயறு 15 ரூபாவால் குறைப்பு, நெத்தலி 5 ரூபாவால் குறைப்பு, 400 கிராம் உள்நாட்டு பால் மாவின் விலை 250 ரூபா, மண்ணெண்ணெய் 5 ரூபாவால் குறைப்பு, சமையல் எரிவாயு (கேஸ்) 25 ரூபாவால் குறைப்பு, வௌ்ளைச் சீனி 2 ரூபாவால் குறைப்பு, பருப்பு 10 ரூபாவால் குறைப்பு, உருளைக் கிழங்கு 5 ரூபாவால் குறைப்பு
04:45:25 – அரச சேவையாளர்களுக்கான 1000 சேவை நிலையங்களை அமைப்பதற்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:41:41 – போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக பொலிஸ் துறைக்கு 150 மில்லியன் ரூபா. தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:39:55 – புதிதாக துறவியாகுபவர்களுக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில்
04:36:07 – தேசிய இளைஞர் அமைப்பு மற்றும் இளைஞர் படையணிக்கு 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04:35:03 – ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் உபகரண கொள்வனவுக்கு வரி விலக்குடனான கடன் வசதி
04:33:58 – ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04:32:34 – சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண்பதற்கு 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. சுகதாஸ அரங்கை புனரமைக்க 175 மில்லியன் ஒதுக்கீடு
04:30:05 – காலம்சென்ற பண்டித் அமரதேவவின் ஞாபகமாக கலைக் கூடம் ஒன்றை அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா
04:27:41 – ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக, 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04:26:25 – அரசாங்கத்துக்கு சொந்தமான வீடுகளில் 10 வருடத்துக்கு மேல் தங்கியிருந்தால் வீடுகள் சொந்தமாக்கப்படும்.
04:24:16 – சமுர்த்தி வேலைத்திட்டம், “ஜன இசுறு” என்று பெயர் மாற்றப்படும். சமுர்திப் பயனாளிகளின் வருமானம் அதிகரிக்கப்படும்.
04:23:26 – மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 40 சதவீத கடன்
04:22:26 – இராணுவத்தை பாதுகாப்பது எமது கடமையாகும்.
04:20:46 – ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டொலர் வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள். இதற்காக 1221 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04:14:34 – தனி வீட்டுத் திட்டத்தில் முதலில் 5 இலட்ச வீடுகள் : மலையகத்துக்கு 25 ஆயிரம் வீடுகள்.
04:10:51 – நாட்டில் சிறப்பான குடிநீர்த் திட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:07:41 – பதுளை, எல்ல, பண்டாரவளை ஆகிய பிரதேசங்கள் சுற்றுலா வலையமாக அபிவிருத்தி செய்யப்படும்
04:07:19 – பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்கள் 32 ஆசனங்களை கொண்டதாக அமைக்க வேண்டும்.
04:03:18 – முச்சக்கர வண்டிகளுக்கு புதியகார்கள். இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04:03:09 – மொபிடல் நிறுவனத்தை பொது நிறுவனமாக பட்டியற்படுத்தல்
04:02:03 – விஞ்ஞானம் தொழில்நுட்பங்களுக்காக 1 306 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:59:24 – பதுளையில் 15 உள்ளூர் விமான நிலையங்கள் அமைக்கப்படும்
03:57:49 – நெனோ நிறுவனங்களுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:56:41 – 15 தொழிற்றுறை ஏற்றுமதி நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்
03:52:01 – அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் வியாபார நிலையங்களை அமைக்க 1000 மில்லியன் ஒதுக்கீடு தனியார் துறைக்கும் அழைப்பு
03:50:46 – இலங்கையின் பெயரை பிரபிரபலப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:47:12 – தொழிநுட்ப இயந்திரங்களின் இறக்குமதிக்காக 75 சதவீத வரி நீக்கம்
03:46:21 – 100, 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுபவர்களுக்கு விசேட ஊக்கச் சலுகை
03:45:39 – சிறப்பான முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா
03:42:34 – மெகா பொலிஸ் திட்டத்துக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
03:41:06 – வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் 250 தொழில் வாய்ப்புகளை பெறுவதற்காக 300 மில்லியன் ரூபா முதலீடு
03:37:44 – சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கடன் வசதிகள் : 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:35:10 – சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகள் சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்
03:33:48 – தனியார் பஸ் சேவைகள் 11 மணிவரை இயங்க வேண்டும்.
03:33:12 – கடைகள் இரவு 11 மணி வரை திறந்து வைக்கப்படுதல் வேண்டும்.
03:30:41 – வணிக நிலையங்கங்களை பதிவு செய்வதற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:28:54 – தனியார் துறையினருக்கு 5 நாள் மற்றும் 45 மணிநேர வேலை
03:27:51 – இலங்கையில் படிப்பதற்கு விரும்பும் மாணவர்களுக்கு ஐந்து வருடம் சென்று வருவதற்கு வீசா
03:25:47 – பாலர் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு தவணையிலும் மருத்துவ சோதனை
03:24:45 – தொழில்சார் கல்விக்கான தரத்தை ஏற்படுத்துவதற்காக, 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:24:21 – வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 25 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு
03:23:38 – தேசிய அறக்கட்டளைக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:22:46 – பார்மசி நிலையங்கள் பதிவு செய்யாவிட்டால் ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு
03:20:50 – பாலின வன்முறை மற்றும் பகிடிவதைகளை தடுப்பதற்கு பல்கலைக்கழகங்களில் சிறப்பு நிலையங்கள்
03:18:14 – 250 மில்லியன் ரூபா செலவில் களனி பல்கலைக்கழகத்தில் மின் கற்றல் மையம்
03:16:56 – மாணவர்களுக்கு இலகுவாக அறிவை பெற்றுக்கொள்வதற்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை பெற்றுக் கொடுக்க 4 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா
03:15:50 – பத்தாயிரம் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கு மேலதிகமாக 2 ஆயிரம் மில்லியன் ரூபா
03:14:33 – பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புக்கள் 8 மணிவரை நீடிக்கப்படும்
03:13:48 – சிறிய வெட்டுப்புள்ளிகளால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாமல் இருக்கும் 15 ஆயிரம் மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை மேற்கொள்ள 8 இலட்சம் ரூபா வழங்கப்படும். 300 மில்லியன் ஒதுக்கீடு
03:10:36 – பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று இடங்களை பிடிக்கு மாணவர்களுக்கு சர்வதேசத்தில் உயர்கல்வியை கற்பதற்கு புலமைப்பரிசில். இதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
03:08:51 – 2020 ஆம் ஆண்டு தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் சேர்த்து கொள்ளப்படுவர்.
03:06:18 – ருகுனு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்று அதிகராபிட்டிய வைத்தியசாலையில் புதிய கட்டிடம் அமைக்க திட்டம்
03:04:43 – கேகாலை மற்றும் பதுளையிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:03:58 – மாணவர்களுக்கு 2இலட்சம் ரூபா காப்புறுதி வழங்க தீர்மானம்
03:03:13 – விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு 175 மில்லியன் ஒதுக்கீடு
03:02:24 – மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த சகல வங்கிகளிலும் கணக்குகள் திறக்கப்படும்
02:58:50 – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட கரையோர மாவட்ட மக்களின் ஜீவனோபாய விருத்திக்கு 1200 மில்லியன் ஒதுக்கீடு
02:57:38 – அடுத்த வருடம் க.பொ.த. உயர்தரத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் 175000 பேர் மற்றும் உயர்தர கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் 28000 பேருக்கு இலவச டெப்
02:56:03 – 1 கிலோ கோழி இறைச்சியின் அதிகூடிய விற்பனை விலை 420 ரூபாவாக நிர்ணயம்
02:55:47 – பாடசாலை தளபாடங்களுக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
02:55:06 – மொரகாகந்தை, உமா ஓயா திட்டங்களுக்கு 60045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
02:54:26 – 20,000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
02:52:59 – கல்விக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கல்
02:52:31 – மன்னாரில் உள்ள தாரக்குளம் புனரமைக்கப்படும்
02:48:35 – கொக்கோ, கோப்பி, மிளகு வெற்றிலை உற்பத்திகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும்.
02:46:51 – மீன்பிடி கைத்தொழிலுக்காக உட்கட்டமைப்பு, நங்கூர வசதிகளுக்காக 1350 மில்லியன் ரூபா
02:46:01 – கோழி பண்ணையாளர்களுக்கு 15 ஆயிரம் குளிரூட்டி சாதனங்கள் வழங்கப்படும்
02:45:21 – மீன் பிடித் துறையில் 163 பில்லியன் இலாபம் கிடைத்துள்ளது. இதனை ஐந்து மடங்களால் அதிகரிக்க நடவடிக்கை
02:44:46 – ஏற்றுமதி சந்தைகளில் இடம்பிடிக்க பழங்களை பயிரிடுவதற்காக 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு
02:43:27 – இறப்பர் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்ய 900 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
02:40:52 – தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, 75 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு
02:40:01 – பால் பண்ணையாளர்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 மாடுகள் வழங்க திட்டம்
02:37:37 – றப்பர் பெருந்திட்டம் அறிமுகம் செய்யப்படும்
02:35:35 – 2020 ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய திட்டம்
02:35:03 – விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்
02:31:41 – விவசாய களஞ்சியசாலைகள் வவுனியா மன்னார் கிளிநொச்சி ஆகிய இடங்களில் அமைக்கப்படும்
02:30:52 – விவசாயத் துறைக்காக 20 ஆயிரம் ஏக்கர் காணி வழங்கப்படும்
02:28:11 – நவீன தொழினுட்பத்தை விவாசயத்தில் பயன்படுத்த திட்டம்
02:25:06 – விவசாயத்துக்கு 200 மில்லியன் ஒதுக்கல்
02:24:30 – 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது போன்று இந்த வரவு செலவுத் திட்டத்தில் தரப்படும் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
02:23:00 – வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் போதும் சகலத் தரப்பினரின் கருத்துக்களும் பெறப்பட்டுள்ளது.
02:20:04 – பல்கலைக்கழக மாணவர்களின் ஆலோசனைகளையும் பெற்று இந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தோம்.
02:18:47 – 13 வருடம் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்
02:18:26 – எதிர்காலத்தில் வடக்கு மற்றும் தெற்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தனித் தனியான தீர்வுகள்
02:16:21 – நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்
02:15:55 – இடம், கல்வி, தொழில் சகலவற்றையும் முழுமையடைய செய்வோம்
02:14:35 – தனியார் தொழிற்துறையை ஊக்குவிப்பதற்கு முதலீட்டு வலயங்கள்
02:12:09 – சர்வதேச நாடுகளுடனான கொள்கைகளில் மாற்றம் ஏற்படும்.
02:09:07 – ஜனாதிபதி சற்றுமுன்னர் சபைக்கு வருகை தந்தார்.
02:08:22 – நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள பல கவர்ச்சிகரமான திட்டங்கள் உள்ளன.
02:06:11 – மக்கள் அனைவரும் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல எம்மோடு இணைய வேண்டும்
02:04:23 – 2017 ஆம் ஆண்டை அபிவிருத்தி ஆண்டு என பெயரிட்டுள்ளோம்.
02:02:34 – நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்ல பல திட்டங்களை உள்ளடக்கியுள்ளோம்
01:57:17 – 71 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் சபையில் முன்வைப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
2017 வரவு செலவு திட்டம் ஒரே பார்வையில் Reviewed by NEWMANNAR on November 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.