காவி உடையைப் பயன்படுத்தி சமாதானத்தைக் குழப்ப முயற்சி - கிழக்கு விவசாய அமைச்சர் குற்றச்சாட்டு...
"இலங்கையின் தற்போதைய சமாதான சூழ்நிலையை மத ரீதியில் குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். இதற்காக அவர்கள் காவி உடையைப் பயன்படுத்துகின்றார்கள் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டில் தற்போது உருவாகியுள்ள சமாதான சூழ்நிலையை மத ரீதியில் குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள்.
மதத்தைப் பின்பற்றியவர்கள் - மதத்தில் கூடுதலாக பிரியம் வைத்துள்ளவர்கள் மிகக் கொடுமைகளைச் செய்துள்ளார்கள்.
உலக வரலாற்றில் சிலுவை யுத்தம் மதத்தின் பெயரால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று இரத்தம் சிந்தவைத்தது.
தற்போது மதத்தைப் முன்னிறுத்தி காவி உடையைப் பயன்படுத்தி சிலர் நாட்டில் குழப்பமான நிலையைத் தோற்றுவிக்க முனைகின்றார்கள்.
இந்தக் குழப்பநிலையில் எங்களுடைய உறுப்பினர்கள் மிக கவனமாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டிருக்கின்றார்கள்.
ஒரு பௌத்த பிக்கு தவறாக நடந்துகொண்டிருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த பௌத்தர்களையும் புண்படுத்தக்கூடிய விதத்தில் நாங்கள் பேசக் கூடாது.
யார் தவறு செய்தாரோ அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மட்டக்களப்பில் ஒரு பௌத்த பிக்கு பல்வேறான குழப்ப வேலைகளை மேற்கொண்டுள்ளார்.
குறித்த பௌத்த பிக்கு சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும். அவருக்கு எதிரான வழக்கு மிக விரைவில் வரவிருக்கின்றது" என மேலும் தெரிவித்தார்.
காவி உடையைப் பயன்படுத்தி சமாதானத்தைக் குழப்ப முயற்சி - கிழக்கு விவசாய அமைச்சர் குற்றச்சாட்டு...
Reviewed by Author
on
November 24, 2016
Rating:

No comments:
Post a Comment