தமிழ்மொழிப் பரீட்சை வினாத்தாளை வழங்கி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பாடசாலை!
தமிழ்மொழிப் பாட பரீட்சை வினாத்தாளை வழங்கி மாணவர்களை வீடு செல்லுமாறு பாடசாலையொன்றின் நிர்வாகம் அறிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி உடுநுவர டி.பி. விஜேதுங்க தேசிய பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் தவணைப் பரீட்சையின் போது தமிழ்மொழிப் பரீட்சை வினாத்தாளை வழங்கிய பாடசாலை நிர்வாகம், மாணவர்களை பரீட்சை செய்யாது வீடு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் காலை 10.30 மணியளவில் வீடுகளை சென்றடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு தமிழ்மொழி ஆசிரியர் ஒருவருக்கான வெற்றிடம் சில ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும் இது தொடர்பில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தமிழ்மொழி தொடர்பில் எவ்வித புரிதலும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே பாடசாலை மாணவர்கள் பரீட்சை வினாத்தாளுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான ஒர் சம்பவம் எதிர்காலத்தை இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரியுள்ளனர்.
தமிழ்மொழிப் பரீட்சை வினாத்தாளை வழங்கி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பாடசாலை!
Reviewed by Author
on
November 24, 2016
Rating:

No comments:
Post a Comment