மன்/தலைமன்னார் பியர் அ.மு.க.பாடசாலை கண்காட்சியும் சிறுவர் சந்தையும் -Photos
மன்/தலைமன்னார் பியர் அ.மு.க.பாடசாலையில் கண்காட்சியும் சிறுவர்சந்தை நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது வலயக்கல்விப்பணிப்பாளரும் சிறப்பு விருந்தினராக எமது கோட்டக்கல்விப்பணிப்பாளரும் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் எமது விருந்தினர்களாக எமது பகுதியில் உள்ள பள்ளிகளின் மௌவிகளும் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்களும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டதுடன் இப்பகுதியின் பாடசாலைகளின் ஆசிரியர்களும் மாணவர்களும் பார்வையிட்டு மகிழ்ந்தனர் அதிகமான பெற்றோர் இந்நிகழ்வின் பங்காளராகவும் பார்வையாளர்களாகவும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் நான்கு புலமைபரிசில் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் 2016ம் ஆண்டில் சிறந்த வகுப்பறை முகாமைத்துவத்திற்கான ஆசிரியருக்குமான பரிசும் ஆசிரியர் தின நினைவுப் பரிசும் மகாணமட்ட மீலாத் நபி போட்டியின் இரு வெற்றியாளர்களுக்கு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் சிறந்த கண்காடசிக்கு மக்கள் வங்கியினரால் பரிசில்களும் வழங்கப்பட்டது. மேலும் சந்தை செயற்பாட்டு வருமானங்களை வங்கியில் சேமிக்கும் மாணவர்களுக்கு பரிசு பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மன்/தலைமன்னார் பியர் அ.மு.க.பாடசாலை கண்காட்சியும் சிறுவர் சந்தையும் -Photos
Reviewed by NEWMANNAR
on
November 10, 2016
Rating:

No comments:
Post a Comment