120 பேருடன் விமானம் சிறைப்பிடிப்பு! கையெறி குண்டுகளுடன் நபர்கள்! அதிர்ச்சி செய்தி
மால்டாவில் 120 பேருடன் லிபியா விமானம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Libyan Afriqiyah Airways A320 என்ற உள்நாட்டு விமானம் 111 பயணிகளுடன் லிபியாவின் Sebha-ல் Tripoli -க்கு இன்று காலை உள்ளூர் நேரப்படி 10.10 மணிக்கு புறப்பட்டது.
திடீரென விமானம் மால்டா நோக்கி பறந்ததுடன், அங்கேயே தரையிறக்கப்பட்டது.
விமானத்தை இருவர் கடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் கையெறி குண்டுகளுடன் அச்சுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தங்களை கடாபியின் ஆதரவாளர்கள் என கூறிவரும் இருவரும், கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே பயணிகளை விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை மால்டாவின் பிரதமர் Joseph Muscat உறுதிப்படுத்தியுள்ளார்.
120 பேருடன் விமானம் சிறைப்பிடிப்பு! கையெறி குண்டுகளுடன் நபர்கள்! அதிர்ச்சி செய்தி
Reviewed by Author
on
December 23, 2016
Rating:
Reviewed by Author
on
December 23, 2016
Rating:


No comments:
Post a Comment