அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? தொடரும் மரண சந்தேகம்!


இன்னமும் தீரவில்லை சந்தேகங்கள். "கால்கள்... பற்கள்... எங்கே?' ஜெயலலிதாவின் உடல் மீது முன்னாள் கவர்னர் ரோசய்யா மலர் வளையம் வைக்கும்போது, சவப்பெட்டியில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும்போது எடுக்கப்பட்ட காட்சிகளில்... கால்கள் குறித்த சந்தேகம் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் நாம் விசாரித்தோம், “""ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப் படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன''’என்ற டாக்டர் வீ.புகழேந்தி நம்மிடம், “""சுயநினைவற்ற நிலை யில்தான் ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் செய்யப் பட்டார்.

அதற்கு முன் நான்கு நாட்கள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டிருக்கிறார். அந்த நாட்களில் பல முக்கியமான அரசு நிகழ்ச்சிகளைக்கூட ஜெய லலிதா ரத்து செய்திருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு மருத்துவராக இருந்த டாக்டர் சிவக்குமார் சசிகலாவின் உறவினர். காய்ச்சல், நீர்ச்சத்துக்குறைவு என்று முதலில் அப்பல்லோ அறிக்கை விட்டாலும்கூட ஜெயலலிதாவுக்கு சிறுநீர்த்தொற்று இருந்தது.

கட்டுங்கடங்காத சர்க்கரை வியாதியும் இருந்தது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கிருமியானது இரத்தத்தில் கலந்து ‘செப்டி சீமியா’ என்கிற பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கலாம்.

செப்டிசீமியா சிகிச்சையில் சர்வதேச நிபுணரான லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலேவை வரவழைத்தது இதை உறுதிப்படுத்துகிறது.

மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுவதற்கு சில வருடங்களுக்கு முன்பேகூட டயாபட்டிக் கேங்கிரின் ஏற்பட்டு ஜெயலலிதாவுக்கு டி-ஆர்டிகுலேஷன் செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது, கட்டுக்கடங்காத சர்க்கரையின் காரணமாக காலிலுள்ள இரண்டு விரல்கள் வெட்டி எடுக்கப்பட்டது உண்மை.

இரத்தத்தில் கிருமித் தொற்றுக் காரணமாகக்கூட நுரையீரலி லும் மிட்ரல் வால்விலும் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்க லாம்.

இரத்தத்தில் கலந்த கிருமியானது கால் பகுதிக்கும் பரவியிருக்கலாம். மேலும், சர்க்கரை கட்டுக்கடங்காத நிலையில் இருக்கும்போது உயிரைக் காப்பாற்ற காலை எடுக்க வேண்டிய வாய்ப்புகள் உள்ளன.

அதுமட்டுமல்ல, இரண்டு வாரங்களுக்குமேல் படுத்தபடுக்கையாக இருந்தாலே தமனி(vein)யில் இரத்த உறைவு பிரச்சினை ஏற்படும்.

ஜெயலலிதா அவர்களோ, இரண்டு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்ததால் காலில் இரத்த உறைவு பிரச்சினை (deep vein thrombosis) ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

மேலும், அவர் 105 கிலோ எடை கொண்டவர். இதனால், காலில் இரத்த ஓட்டம் குறைந்து ஏற்கனவே உள்ள கிருமித்தொற்றும் தீராத சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்ற வேண்டி காலை எடுக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.

அதாவது, முழங்காலுக்குக் கீழ் (below knee amputation) காலை எடுத்ததற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால், அப்பல்லோ முழுமையான சிகிச்சை விவரங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இப்போதுகூட ஜெயலலிதா அவர்களுக்கு ஏன் கார்டியாக் அரெஸ்ட் வந்தது என்று அப்பல்லோ விளக்காததால் இன்னமும் சந்தேகங்கள் பெருகிக்கொண்டே போகின்றன''’என்கிறார் அவர்.

இறந்துவிட்டால் பெரும்பாலும் இரண்டு கால் கட்டை விரலையும் ஒன்றாக சேர்த்து கட்டி விடுவார்கள். அப்படிக் கட்டும்போது, போர்த்தி வைக்கப்பட்டிருக்கும் உடலின் கால் செங்குத்தாக தெரிந்துவிடும்.

ஆனால், ஜெயலலிதாவின் உடல் கிடத்தப்பட்டிருந்த போது கால்கள் செங்குத்தாக இல்லை. ஒருவேளை இரண்டு கட்டைவிரலும் கட்டப்படாமல் இருந்திருந்தால்கூட 45 லிருந்து 60 டிகிரி கோணத்திலாவது கால்கள் இருந்திருக் கும்''’என்கிறார்கள் ஜெ. மரணத்தில் சந்தேகம் எழுப்புகிறவர்கள்.

இறந்துபோனவருக்கு கால்கள் இல்லையென் றால் அவருக்கு சவப்பெட்டி எப்படி தயாரிப்பீர்கள்?' என்று சேலையூரைச் சேர்ந்த சவப்பெட்டி தயாரிப்பு டீலர் ஜோசப்பிடம் கேட்ட போது,

பொதுவாக, 2 அடி அகலம், 6அடி நீளம் என்கிற கணக்கில் பெரும் பாலானவர்களுக்கு சவப்பெட்டி தயாரிப்போம். 6 அடிக்கு மேல் உயரமாக இருப்பவர்கள் என்றால் அளவு எடுத்து அதற்கேற்றார்போல் சவப்பெட்டி தயாரிப்போம்.

குழந்தைகள் சிறுவர்கள் என்றால் நான்கரை அடி நீளத்தில் பெட்டி இருக்கும். ஆபரேஷன் மூலமோ விபத்தின் மூலமோ கால்கள் இழந்தவர்களுக்கு ஆர்டர் கொடுக்கும் அவர்களது உறவினர்களின் விருப்பப்படிதான் சவப்பெட்டி செய்வோம்.

காரணம், சிலர் 6 அடியே செய்து கொடுங்கள் என்பார்கள், சிலர் சடங்கின் காரணமாக பெட்டியில் இடைவெளி இருக்கக்கூடாது என்பார்கள். அதற்கேற்றபடி, அளவு எடுத்து தயாரிப்போம் என்கிறார்.

ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? தொடரும் மரண சந்தேகம்! Reviewed by Author on December 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.