📷நானாட்டான் சுகாதார வைத்திய அரிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்கள் சோதனை- 17 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்.
உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வங்காலை, நானாட்டான் மற்றும் முருங்கன் பொது சுகாதார பரிசோதகர் பகுதிகளில் விசேட உணவு பாதுகாப்பு பரிசோதனை அப்பகுதிகளில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் நேற்று புதன் கிழமை(7) பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனையின் போது காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தல், பிழையான சுட்டுத்துண்டிடல் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தமை போன்ற குற்றங்களின் கீழ் 17 விற்பனை நிலைய உரிமையாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந் நடவடிக்கையானது மேற்ப்பார்வை பொது சுகாதார பரிசோதகர் வின்சன் தலைமையில் வா.ஜெயச்சந்திரன், த.கஜேந்திரன் மற்றும் யே.பாரத்தீபன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்க்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(08-12-2016)
குறித்த பரிசோதனையின் போது காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தல், பிழையான சுட்டுத்துண்டிடல் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தமை போன்ற குற்றங்களின் கீழ் 17 விற்பனை நிலைய உரிமையாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந் நடவடிக்கையானது மேற்ப்பார்வை பொது சுகாதார பரிசோதகர் வின்சன் தலைமையில் வா.ஜெயச்சந்திரன், த.கஜேந்திரன் மற்றும் யே.பாரத்தீபன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்க்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(08-12-2016)
📷நானாட்டான் சுகாதார வைத்திய அரிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்கள் சோதனை- 17 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்.
Reviewed by NEWMANNAR
on
December 08, 2016
Rating:

No comments:
Post a Comment