அண்மைய செய்திகள்

recent
-

2017 ம் ஆண்டிற்கான மாணவா்களை கல்விக்காக தெரிவு ....துரையம்மா அன்பகம்


துரையம்மா அன்பகம் 2017 ம் ஆண்டிற்கான மாணவா்களை தெரிவு செய்யும் நிகழ்வு தேவன்பிட்டி கிராமம் வெள்ளாங்குளம். மாந்தை பிரதேச செயளாலர் திரு,எம்.ஸ்ரீஸ்கந்தக்குமார் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க
DS,GS கிராம மக்கள் அழைப்பினை ஏற்று  தேவன்பிட்டி கிராமம் 2017ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டது.
 அதன்  தொடக்கமாக 20.12.2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 3.30  மணியளவில் கிராம சேவையாலா்கள்   பாடசாலை அதிபா்கள் துரையம்மா அன்பக  உறுப்பினா்கள்  RDS,WRDS கிராம மக்கள் மற்றும் மாணவா்கள் முன்னிலையில் ஆரம்பமாகியது.

கலந்துரையாடலுக்கு வருகைதந்தவர்கள்
GS-திரு.எ.டெனிஸ்ரன் நிசாந்
GS-D.ஜெகப்பிரியா
R.டெனிசர்-அதிபா் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை
யூட்டெஸ் சுகுனா அதிபா் ஆரம்ப படடசாலை தேவன்பிட்டி
இவர்களுடன் துரையம்மா அன்பக  உறுப்பினா்கள் கலந்து கொண்டனர்.

 கிராம சேவகா் திரு.எ.டெனிஸ்ரன் நிசாந் அவா்கள் துரையம்மா அன்பக  உறுப்பினா்களை வருக வருகவேன வரவேற்றதோடு அன்பக செயற்பாட்டை  பற்றி மக்களுக்கு கூறினாா். துரையம்மா அன்பக தலைவா் தனதுரையில் துரையம்மா அன்பகத்தை ஆரம்பிக்கபட்டதன் நோக்கம் எல்லா கிராமத்தில் உள்ள வறிய மாணவா்களின் கல்வி வளா்ச்சியை முன்னிலையில் கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

   மாணவா்கள் வகுப்பு நிலை குறையாமல் இருக்க வேண்டும் எனவும் பெற்றோா்கள்  WRDS ,RDS  GS  மாணவா்களில் கவனம் எடுக்க வேண்டும் எனவும் தொடா்ந்து  தெரிவு செய்வதற்கான காரணம் வறிய  மாணவா்களாக இருக்க வேண்டும் வகுப்பு நிலை குறையாமல் இருக்க வேண்டும் கல்வியில் முன்னிலையில் இருக்க வேண்டும்  எனவும் எந்தவொரு நிலையிலும் கல்வியானது தடைபட்டுவிடக்கூடாது என்ற சிந்தனையின் பயனாக எமது அமைப்பின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் செயற்படுகிறார்கள்.

அச்செயற்பாடானது தேவையதிகம் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குவோம் அதற்கு மாணவர்களாகிய நீங்கள் சிறந்த முறையில் கல்வியின் தொடர்ச்சியான சித்தி வீதத்தினை காட்டவேண்டும் தொடர்ந்தும் இணைந்திருப்போம் கல்விக்காக தலைவா்  கூறினாா் மாணவர்களின் சித்தி நிலை அதன் அடிப்படையில் 23 மாணவா்கள் தெரிவு தெரிவுசெய்யப்பட்டனர்.
 













2017 ம் ஆண்டிற்கான மாணவா்களை கல்விக்காக தெரிவு ....துரையம்மா அன்பகம் Reviewed by Author on December 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.