வவுனியாவில் தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு வவுனியா-Photos
வவுனியாவில் தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு வவுனியா சமனங்குளம் பகுதியில் தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை ) சமனங்குளம் கிராம அலுவலரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
நெஸ்லே நிறுவனத்தின் அனுசரணையில் தென்னை அபிவிருத்தி சபையினால் தெரிவு செய்யப்பட்ட 175 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
நெடுங்கேணி தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னை பயிரிடும் முறை பற்றி செயன்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், 175 பயனாளிகளுக்கு ஐந்து தென்னங்கன்றுகள் வீதம் வழங்கியதோடு அதற்கான மானியமாக பசளைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது, வட மாகாண தென்னை அபிவிருத்தி சபையின் பிராந்திய முகாமையாளர் எஸ்.வைகுந்தன், உதவி பிராந்திய முகாமையாளர் கோபாமல்லி மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு வவுனியா-Photos
Reviewed by NEWMANNAR
on
December 23, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 23, 2016
Rating:






No comments:
Post a Comment