அண்மைய செய்திகள்

recent
-

வடக்கிலுள்ள 26 வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படவில்லை! வடக்கு சுகாதார அமைச்சர் சபையில்


வடக்கு மாகாணத்தில் உள்ள 110 வைத்தியசாலைகளில் 26 வைத்தியசாலைகள் இன்னமும் ஒரு நிரந்தர வைத்தியர் ஒருவர் கூட இல்லாமல் இயங்கி கொண்டுள்ளன என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் 7 ஆயிரத்து 212 அனுமதிக்கப்பட்ட ஆளணிகள் காணப்படுகின்ற போதிலும் 5 ஆயிரத்து 814 உத்தியோகத்தர்களே கடமையாற்றி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வரவு செலவு திட்டத்தை நேற்றைய தினம் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் மத்திய அரசுக்கு உட்பட்ட ஆயிரத்து 398 ஆளணிக்குரிய வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளன.
வடக்கில் உள்ள 26 வைத்தியசாலைகளில் இன்னமும் ஒரு நிரந்தர வைத்தியர் ஒருவர் கூட இல்லாத நிலையில்தான் இயங்கி வருகின்றன. இவற்றில் அநேகமான இட ங்களில் மீள்குடியேற்றம் வேகமாக நடைபெற்று கொண்டுள்ளன. இவ் இடங்களில் மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் , வைத்திய அதிகாரிகள் நிரந்தரமாக நியமிக்கப்படுவதற்கும் மத்திய அரசினால் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

இலங்கை நிர்வாக சேவை தரத்தில் உள்ளோர்க்கும் பாரிய வெற்றிடம் காணப்படுகின்றது. அந்த வகையில் 23 அனுமதிக்கப்பட்ட ஆளணியில் 6 அதிகாரிகளே நிரந்தரமாக சேவையாற்றுகின்றனர். எனவே சுகாதார துறையின் வினைத்திறனான பங்களிப்புக்கு உடனடியாக இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசாங்கம் மூலம் ஆவன செய்யப்படும். வடக்கு மாகாணத்தில் உள்ள பெரிய வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின் வினைத்திறனான விசேட வைத்திய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் தாதிய உத்தியோகஸ்தர்கள், நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் துணை மருத்துவ சேவை உத் தியோகஸ்தர்கள் ஆகியோரை நியமிப்பதற்கும் பொருத்தமான வைத்திய உபகரண வச திகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.                              

வடக்கிலுள்ள 26 வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படவில்லை! வடக்கு சுகாதார அமைச்சர் சபையில் Reviewed by Author on December 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.