அண்மைய செய்திகள்

recent
-

6 லட்சம் கோடி சொத்துகளை புறக்கணித்த மகன்! வாரிசை தேடி அலையும் கோடீஸ்வரர்...


சீனாவில் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் ரூ. 6 லட்சம் கோடி சொத்துகளை வேண்டாம் எனப் புறக்கணித்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

இதனால் தனது சொத்துக்களை பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரை சிறுவனின் தந்தையார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

டாலியன் வான்டா குழுமத்தின் தலைவர் வாங் ஜியான்லின் (62). இவரது குழுமம், வணிக வளாகங்கள், உல்லாச பொழுதுபோக்கு பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் கோடியாகும்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வாங் ஜியான்லின், வயதாகி விட்டதால் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை எனது மகனிடம் ஒப்படைக்க முடிவெடுத்தேன்.

அனைத்து சொத்துகள் மற்றும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்கும் திட்டம் குறித்து எனது மகனிடம் பேசினேன். ஆனால், எனது தொழில்களையும், சொத்துகளையும் நிர்வாகம் செய்ய அவன் மறுத்துவிட்டான்.

மேலும், அவனுக்கு என்னைப் போல தொழிலதிபராக ஆசையில்லை என்று உறுதியாக தெரிவித்துவிட்டான். ஒவ்வொரு இளைஞனுக்கும் தனிப்பட்ட கனவு உள்ளது.

அதற்கான தேடல்களுக்கு முன்னுரிமை கொடுக்க அவனுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே, அவன் சுயமாக எடுத்த முடிவில் நான் தலையிட விரும்பவில்லை.

பல லட்சம் கோடி மதிப்புள்ள இந்த சொத்துகளை நிபுணத்துவம் கொண்ட மேலாளர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு, நிர்வாகத்தை மேற்பார்வையிட மட்டும் முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

வாங் ஜியான்ஸின், இந்தியா வந்திருந்தபோது பிரதமர் மோடியை சந்தித்து ஹரியாணாவில் 1,000 கோடி டாலரை முதலீடு செய்ய உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6 லட்சம் கோடி சொத்துகளை புறக்கணித்த மகன்! வாரிசை தேடி அலையும் கோடீஸ்வரர்... Reviewed by Author on December 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.