அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ‘மறுபிறப்பு’ நூல் வெளியீடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது....முழுமையான படங்கள் இணைப்பு

 வை. கஜேந்திரனின் ‘மறுபிறப்பு’ 
சிறுகதைத்தொகுப்பு நூல் வெளியீடு 13.12.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3-00 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில்
வவுனியா மாவட்டத்தமிழ்ச்சங்கத்தின் அமைப்பாளர்  தமிழறிஞர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் சிறப்பாகநடைபெற்றது.

 இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாக........
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் கே.காதர் மஸ்தான்அவர்களின் (பிரதி நிதியாக திரு.நளர் ஆசிரியர்) கலந்து கொண்டார். மன்னார் மேலதிக அரச அதிபர் திருமதி. அ.ஸ்ரான்லி டிமெல்லும் ஆகியோரும்.
 சிறப்பு விருந்தினர்களாக 
பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்ரனிஸ்லஸ்  மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் சிவஸ்ரீ மகா தர்மகுமாரக் குருக்கள்  மன்னார் நகரசபையின் செயலாளார் எக்ஸ்.எல்.றெனால்டோ கிளிநொச்சி தொழில்நுட்ப உத்தியோகத்தர் இ.குணநாயகம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வொழுங்கில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வி கிறிசா மேரி அன்ரனியும் வரவேற்பு நடனத்தினை மன்னார் பரத கலாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளும் வரவேற்புரையினை மன்னார் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. பு.மணிசேகரனும் ஆசியுரையினை மாங்குளம் அமைதிக் கரங்கள் இயக்குனர் அருட் பணி செ.அன்புராசாவும் வழங்க. சித்தமருத்துவக்கலாநிதி எஸ்.லோகநாதனின் திருப்புகழ் இசைத்தலைத்தொடர்ந்து தலைமையுரையினை தமிழறிஞர் தமிழருவி த.சிவகுமாரன்வழங்க . அறிமுகவுரையினை திருமதி.பொ.ரொவீனா வழங்கினார்.
பிரதமவிருந்தினர்கள்  தலைமை முன்னிலையில் மறுபிறப்பு சிறுகதை தொகுப்பினை வெளியிட்டு வைக்க
நூல் வெளியீட்டினைத்தொடர்ந்து முதல் பிரதியினை துரையம்மா அன்பகத் தலைவர் வே.மனுவேல்பிள்ளை பெற்றுக்கொண்டார்.
சிறப்புப் பிரதிகள் வழங்கலையடுத்து நூல் ஆய்வுரையினை தேசியக் கலைஞர் எஸ்.ஏ.உதயனும் கருத்துரையினை ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி.சாந்தி வாமதேவாவும் வழங்கினார். விருந்தினர்கள் உரைகளைத்தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் வை.கஜேந்திரனும் நன்றியுரையினை பி.அருள்ராஜும் நிகழ்த்த மன்னார் புனித சவேரியர் பெண்கள் கல்லூரி மாணவி செல்வி.ம.ஜான்சியின் நடனத்துடன் வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது.
















































































































மன்னாரில் ‘மறுபிறப்பு’ நூல் வெளியீடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது....முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on December 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.