அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நாவலர் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது....முழுமையான படங்கள் இணைப்பு


எட்டாவது ஆண்டாக இன்று 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணியளவில் மன்-சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மண்டபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது  கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நாவலர் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து தீப ஆரதனையுடன் இடபக்கொடியேற்றலும் தொடர்ந்து விருந்தினர்களை மாலையணிவித்து வரவேற்றலுடன் விழா ஆரம்பமானது.

சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்கள் தலைமையில்
பிரதமவிருந்தினராக
வைத்தியகலாநிதி எஸ்.சிவமோகன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம்
சிறப்புவிருந்தினர்களாக....
திரு.K.S.வசந்தகுமார் பிரதேச செயலாளர் மன்னார்
வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் தலைவர் இந்து ஆலயங்களின் ஒன்றியம் மன்னார்
T.தனேஸ்வரன் அதிபர் மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தே.பா
விஷேடவிருந்தினர்களாக....
திரு.S.சண்முகலிங்கம் முகாமையாளர் மாகாணஆங்கில வளநிலையம் மன்னார்.
திரு.M.இரவீந்திரன்ஆசிரிய ஆலோசகர் இந்து சமயம்
திரு.த.பிரதீஸ்வரன் அ.பி உத்தியோகத்தர்(இந்து கலாசாரம்)மாவட்ட செயலகம் மன்னார்
திரு.வி.செல்வக்குமரன் கிராம அலுவலர் திருக்கேதீச்சரம்
கௌரவவிருந்தினர்களாக....
திரு.சோ.றோகன்ராஜ் பொதுச்செயலாளர்-சைவக்கலை இலக்கியமன்றம்.மன்னார்
திரு.எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா தலைவர்-சிவபூமி இந்து இளைஞர் மன்றம்.மன்னார்
திரு.தி.பாலசுப்பிரமணியம் தலைவர்-இந்து முன்னணி கழகம் மன்னார்
திரு.க.டினேஸ்வரன் தலைவர்-நவசக்தி இந்து இளைஞர் மன்றம் மன்னார் இவர்களுடன் மாணவமாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெரியார்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்
நிகழ்வுகளாக,,,, 

வரவேற்புநடனம் இந்து முன்னணி அ.நெ.பாடசாலை பேசாலை மாணவிகளாளும்
சிவதாண்டவம்-கீரி ஸ்ரீமுருகன் அ.நெ.பாடசாலை மாணவிகளாலும்
பேச்சு-செல்வி.றேஸ்மா ராஜன் ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் அ.நெ.பாடசாலை தலைமன்னார் இவருடன்
செல்வி.துர்க்கா ஜெயக்குமார் ஞானவைரவர் அ.நெ.பாடசாலை பெரியகடை மன்னார் சிறப்புரையாக  நாவலர் எனும் தெய்வம் தலைப்பில் செஞ்சொற்செல்வர் சிவஸ்ரீ.நா.பிரபாகரக்குருக்கள் செயலாளர்.அந்தணர் ஒன்றியம் வவுனியா நிகழ்த்த பிரதமவிருந்தினர் உரையினை  வைத்தியகலாநிதி எஸ்.சிவமோகன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம் அவர்கள் ஆற்ற சிறப்பு நிகழ்வாக நாவலர் நினைவு விருதினை  சைவமகா சபையின் தலைவரும் ஓய்வு பெற்ற எந்திரி இராமக்கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் இறைபணியாளர் விருதினை பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தினைச்சேர்ந்த 30வருடமாக கோயில் தொண்டு ஆற்றிவரும் கந்தையா அவர்களுக்கும்.
 வருடாவருடம் சிவபூமி இந்து இளைஞர் மன்றத்தினரால் அறநெறியினை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களில் 05ஆசிரியர்களை கௌரவிப்பது வழக்கம் இம்முறையும்
  • வெற்றியானந்தன் விக்னேஸ்வரி அ.நெ.பாடசாலை இராசமடு
  • நடராசா புவனேஷ்வரி அ.நெ.பாடசாலை கூராய்
  • ஆனந்த ராசா வள்ளியம்மா அ.நெ.பாடசாலை தேத்தாவாடி
  • உதயகுமார் வசந்தி அ.நெ.பாடசாலை வட்டுப்பித்தான் மடு உயிலங்குளம்
  • யோகலிங்கம் விஜிதா அ.நெ.பாடசாலை முருகன் கோவில் பேசாலை இந்த ஆசிரியர்கள் பொன்னாடைபோர்த்தி மாலையணிவித்து சான்றிதழும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நாவலர் வழி வாழ்க
நாவலர் புகழ் வாழ்க
என்னும் திருவாசகத்தோடு விழா இனிதே நிறைவுற்றது
தொகுப்பு -வை கஜேந்திரன்-










































































மன்னாரில் நாவலர் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது....முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on December 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.