அண்மைய செய்திகள்

recent
-

இரணைமடு குளத்திலிருந்து சந்தேகநபரின் சடலம் மீட்பு: வழக்கு ஒத்திவைப்பு


யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது பொலிஸாரின் கோரிக்கையின் பிரகாரம், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்களை அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் இரணைமடு குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட போதிலும், சடலத்தில் 16 உள்காயங்களும், 6 வெளிக்காயங்களும் இருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.

ஆகவே, இதுவொரு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சம்பவத்தின்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரணைமடு குளத்திலிருந்து சந்தேகநபரின் சடலம் மீட்பு: வழக்கு ஒத்திவைப்பு Reviewed by NEWMANNAR on December 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.