அண்மைய செய்திகள்

recent
-

ஒளிரும் வாழ்வு அமைப்பின் அலுவலக திறப்புவிழாவும் சர்வதேச வலுவிழந்தோர் தினமும்-Photos

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகபிரிவுக்குட்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒளிரும் வாழ்வு அமைப்பானது நேற்றையதினம் உடையார்கட்டு பகுதியில் தனக்கான ஒரு அலுவலகத்தை திறந்து வைத்ததோடு சர்வதேச வலுவிழந்தோர் தினத்தி னையும் அனுடித்தது.

ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர் ப.இராசகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் ஆ.நட ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா சிவசக்தி ஆனந்தன் வடமாகாணசபை பிரதிஅவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளான 20 பாடசாலைமாணவர்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு வங்கி புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் 50 பேருக்கான உலருணவுப்பொதிகளும் 02 பேருக்கு நிதி உதவியும் 05 பேருக்கான சுழற்சி முறை கடன்களும் வழங்கிவைக்கப்பட்டதோடு வருகைதந்த விருந்தினர்களின் சிறப்பு ரைகளும் இடம்பெற்றது இதில் பொருந்திரளான மாற்றுவலுவுள்ளோரும் மக்களும் கலந்துகொண்டனர்.





4
ஒளிரும் வாழ்வு அமைப்பின் அலுவலக திறப்புவிழாவும் சர்வதேச வலுவிழந்தோர் தினமும்-Photos Reviewed by NEWMANNAR on December 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.