புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை.!
பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு பிரச்சினைகளையும் நெருக்கடிகளைகளையும் எதிர்நோக்கி வருவதாகத் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கத் தமிழர்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த நத்தார் பண்டிகைக் காலத்தில் புலிகளை தடைப் பட்டியலிலிருந்து நீக்கி தமிழ் மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பரிசாக தடைநீக்கத்தை வழங்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ' ரமில்ஸ் போ ஒபாமா " என்ற அமைப்பினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை.!
Reviewed by NEWMANNAR
on
December 21, 2016
Rating:

No comments:
Post a Comment