அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்


கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்ட வடமாகாண சபையின் அமர்வுகள் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது, சபையில் சிவாஜிலிங்கம் “என்னால் சபை அமர்வுக்கு இடையூறு ஏற்பட்டதாக நீங்கள் கருதுவீர்களேயானால் அதற்கு நான் மன்னிப்பு கோருகின்றேன்” என தெரிவித்தார்.

அதற்கு உறுப்பினர் சயந்தன், “சிவாஜிலிங்கத்தின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். மன்னிப்பு கேட்ட அவரது பெருந்தன்மையை முன்னுதாரணமாக கொள்கின்றேன்” என தெரிவித்தார். 

இதன்போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் “சம்பவம் நடைபெற்ற போது நானே சிவாஜிலிங்கத்தை சபையின் முன்னால் வருமாறு அழைத்தேன். நான் அழைத்தமைக்கு அமைய அவர் முன்னால் வந்ததை அனைவரும் தவறாக எண்ணி கூச்சல், குழப்பம் விளைவித்து விட்டனர். எனவே சகலதையும் மறந்து விவாதத்தை தொடர்வோம்” என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, விவாதம் மீண்டும் ஆரம்பமாகியது.
வடமாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on December 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.