அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இவ்வருடம் மழைவீழ்ச்சியில் பாரிய பின்னடைவு



வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாரிய வீழ்ச்சி எற்பட்டுள்ளதாக வவுனியா வளிமண்டல அவதானிப்பாளர் தாமோதரம் சதானந்தம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1795.7மில்லிமீற்றர் பதிவாகியள்ளதாகவும் 2016 இவ்வருடம் ஜனவரியிலிருந்து டிசம்பர் 22.12.2016 வரையான காலப்பகுதியில் 1114.5மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் இதனடிப்படையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் மழை வீழ்ச்சியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்இவ்வருடத்தில் அதிகூடிய வெப்பநிலை ஏப்பிரல் மாதம் 31.4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதுடன் மற்றும் இவ் வருடத்தில் அதிகூடிய மழைவீழச்சி மே மாதம் 477.4 மி.லீ. வரை பதிவாகியுள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் இவ்வருடம் மழைவீழ்ச்சியில் பாரிய பின்னடைவு Reviewed by NEWMANNAR on December 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.